தண
தண்டல்-தவா-நீங்காத
சரோருகம்-தாமரை, ஞெகிழி-இதுவும் ஒருவகைச் சிலம்பு, இரட்ட-ஒலிக்க, கொண்டல்-மேகம், அமர்-விரும்பும்,
கொடை-வள்ளன்மைக் குணம், கரதலம்-கை, சேவையர் குலம்-வேளாளர் குலம், சிகாமணி-சிரோரத்னமே,
சடாடவியர்-சடைக்காட்டையுடையவராம் சிவ பெருமான், மன்றை - பொற்சபையை, சடை+அடவி, பராவி
போற்றி.
விளக்கம் :
குழந்தையைத் தம் அருகே அன்புடன் அழைக்கும் பருவமே வாரானைப் பருவமாகும். இது பன்னிரண்டாம்
மாதம் நிகழும் நிகழ்ச்சி. “ஆண்டு வரையின் ஈண்டு வருக” என்பது பிங்கலந்தை. இது வருகைப்
பருவம் என்றும் கூறப்பெறும். வாரானை என்பது வா+ரு+ஆனை எனப்பிரியும்-ஆனை தொழிற்பெயர் விகுதி.
விரித்தல் விகாரம் வா-பகுதி.
இப்பாடல் குழந்தைகட்குப்
பூட்டப்படும் அணிகள் இன்னின்ன என்பதைப் புலப்படுத்தி நிற்கறது. இவ்வாறு குழந்தைகட்கு அணிகலன்களைப்
பூட்டி அழகு பார்ப்பது பெற்றோர்க்கும் மற்றோர்க்கும் உவகையாகும். குமரகுருபரரும் முத்துக் குமாரசாமிபிள்ளைத்
தமிழில்,
செம்பொன்அ
டிச்சிறு கிண்கிணி யோடு
சிலம்பு கலந்தாடத்
திருவரை அரைஞாண்
அரைமணி யொடுமொளி
திகழரை வடமாடப்
பைம்பொன்
அசும்பிய தொந்தியொ டுஞ்சிறு
பண்டி சரிந்தாடப்
பட்ட நுதற்பொலி
பொட்டொடு வட்டச்
சுட்டி பதிந்தாடக்
கம்பி விதம்பொதி
குண்டல மும்குழை
காதும் அசைந்தாடக்
கட்டிய சூழியும்
உச்சியும் உச்சிக்
கதிர்முத் தொடும்ஆட
|