பக்கம் எண் :

அம

482

             வாரானைப் பருவம்

        அம்பவ ழத்திரு மேனியும் ஆடிட
            ஆடுக செங்கீரை
        ஆதி வயித்திய நாத புரிக்குகன்
            ஆடுக செங்கீரை 

என்றனர்.

    இரத்தினங்கள் உலகம் மதிக்கும் பெருமை வாய்ந்தவை ஆதலின், மண்டலம் மதிக்கும் மணி எனப்பட்டன.  உச்சிப்பூ இரத்தினங்களால் செய்யப்பட்டது  என்பதனால்   சேக்கிழார் குடியின் வளம் பெறப்படுகிறது.  பட்டமும், சுட்டியும், வாகுவலயமும், மதாணியும் உதய வெயில் செய என்றதனால் இவையும் உச்சிப்பூப்போல இரத்தினங்களால் செய்யப்பட்டன என்பது தெரிகிறது.  தொண்டர்கள் மகத்துவமுடையவர்கள் என்பது, “தொண்டர்தம் பெருமை சொல்லவும் அரிதே” என்பதனாலும், “அன்பர்பணி செய என்னை ஆளாக்கி விட்டுவிட்டால் இன்பநிலை தானேவந்து எய்தும் பராபரமே” என்றதனாலும் “வாயாரத் தன்னடியே பாடும்தொண்டர் இனத்தகத்தான்” என்றதாலும் தொண்டர்கள்.  பெருமைக்கு உரியவர்கள் என்பது தெரிகிறது.

முட்டில் அன்பர்தம் அன்பிடும் தட்டுக்கும் முதல்வர்
மட்டும் நின்றதட் டருளொடும் தாழ்வுறும் வழக்கால்
பட்டொ டும்துகில் அநேககோ டிகளிடும் பத்தர்
தட்டு மேற்படத் தாழ்ந்தது கோவணத் தட்டு

என்னும் பாடல் மூலம் தொண்டர் அன்பின்முன் இறைவர் அருள் தாழ்ந்தே நிற்கும் என்று சேக்கிழாராலும் அறிவிக்கப்பட்ட காரணங்களால் தொண்டர் மகத்துவம் சிறந்தது என்பது உண்மையாகும்.  சீர்த்தியாவது மிகுபுகழாகும்.  “சீர்த்தி மிகுபுகழ்” என்பது தொல்காப்பியம்,

    தொண்டர் புகழ் விண்டலம் மதிக்கும் அளவு உடையது என்பதைக் கயிலையம் கிரிச்சாரலில் இருந்த உபமன்யு முனிவர் முதலான முனிபுங்கவர்கள் சுந்தரரைத் துதித்த முறையால் உணரலாம்.  இந்த உண்மையினைச் சேக்கிழார்,