பக்கம் எண் :

என

 

           பாயிரம்

5

என்று தாமே எடுத்து மொழிதல் காண்க. இறைவன் திருவாய் மலர்ந்ததனால் “ உலகெலாம் “ எனும் தொடர் மறை ஆயிற்று.  இறைவர் உயிர்களுக்கருளும் இயல்பு அனந்தம்.  அவர் அவர்களின் தகுதிக்கேற்ப அருள்பவர்.  இதனைத்தான் திருஞான சம்பந்தர்  “ ஆட்பாலவர்க்கு அருளும் வண்ணம் ஆதிமாண்பும் கேட்பான்புகில் அளவிலை “  என்று அருளிப் போந்தார்.

    ஆசிரியர் திரு பிள்ளை அவர்கள் “ வினை உருபு தொக “  என்னும் தொடரில் அரிய பொருள் நுட்பத்தினைப் புலப்படுத்தி யுள்ளனர்.  அதாவது,

    உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
    நிலவு லாவிய நீர்மலி வேணியன்
    அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
    மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்

என்னும் திருத்தொண்டர் புராணப் பாடலின் ஈற்றடியில் உள்ள  “ மலர்சி லம்படி “  என்னும் சீர்களுக்கு உண்மைப் பொருள் இதுதான் ;  வேறன்று, என்னும் அரிய குறிப்பை உணர வைத்துள்ளார்.  மலர் சிலம்படி என்பதன் பொருள், உலகெலாம் மலரும், மலர்கின்ற மலர்ந்த சிலம் பணிந்த திருவடி என்பதாம்.  அவ்வாறின்றி “ மலர் போன்ற சிலம்பினை அணிந்த திருவடி “  என்று உவமத்தொகையாகப் பொருள் கூறுதல் தவறாகும்.  இப்பொருள் தருவதாயின்  “  மலர்ச்சிலம்படி “  என்று சகர ஒற்று மிகுந்திருக்கும்.  ஆனால், மலர் சிலம்படி என ஒற்று மிகாது, வினைத் தொகை இலக்கணப்படி இத் தொடர் அமைந்துள்ளது.  இவற்றைச் சீரிய முறையில்  “  வினை உருபு தொக “  என்று பாடியருளினர்.  வினை என்றது ஈண்டு வினைத் தொகையைக் குறிக்கும்.  உருபு தொகுத்தலாவது இடையே முக்காலம் மறைந்திருத்தல் ஆகும்.  வினைத் தொகை இலக்கணம் கூற வந்த தொல் காப்பியர்,  “  வினையின் தொகுதி காலத் தியலும் “  என்றார்.  இதற்கு விளக்கம் தந்த நச்சினார்க் கினியர்,  “  வினைச் சொல்லினது ஈறாய்த் தொக்கு நிற்கும் எழுத்துக்கள், காலத்