| 
என
 
என்று கூறியதோடு நில்லாது, 
இறைவனே ஞானமயன் என்று கூறி இன்புறுவாராயினர். 
    கான நாடு கலந்து திரியில்என் 
    ஈனம் இன்றி இருந்தவம் 
செய்யில்என் 
    ஊனை உண்டல் ஒழிந்துவான் 
நோக்கில்என் 
    ஞானன் என்பவருக் 
கன்றி நன்கில்லையே 
என்றதூஉம் காண்க. 
    இறைவனைப் பாடுதலே 
இன்பு என்பது எவரும் அறிந்த உண்மை.  இறைவனே சுந்தரரை நோக்கி, 
        மற்றுநீ வன்மை பேசி 
            வன்தொண்டன் 
என்னும் நாமம் 
        பெற்றனை நமக்கும் 
அன்பில் 
            பெருகிய சிறப்பில் 
மிக்க 
        அர்ச்சனை பாட்டே 
யாகும் 
            ஆதலால் மண்மேல் 
நம்மைச் 
        சொற்றமிழ் 
பாடுகென்றார் 
            தூமறை பாடும் 
வாயார் 
என்றனர்.  
    பன்மாலை திரள்இருக்கத் 
தமைஉணர்ந்தோர் 
        பாமாலைக் கேநீதான் 
பட்சம் என்று 
    நன்மாலை யாஎடுத்துச் 
சொன்னார் நல்லோர் 
        நலம்அறிந்து 
கால்லாத நானும் சொன்னேன் 
என்ற தாயுமானவரும் பாடி 
இன்பு கண்டார்.  உயிர் கெடுதல் என்பதுடன் இன்பு என்னும் சொல்லைக் கூட்டுக.  உயிர் கெடுதலாவது 
பாடுங்காலத்துத் தம்மை மறந்து அத்து விதமாய் நிற்றலை என்க.  உயிர் கெட்ட நிலையில் இன்பு 
பெற்றதை மணிமொழியார், 
வான்கெட்டு மாருதம் 
மாய்ந்தழல் நீர்மண் கெடினும் 
தான்கெட்டல் இன்றிச் 
சலிப்பறியாத் தன்மையனுக்கு 
ஊன்கெட் டுயிர்கெட் டுணர்வுகெட் 
டென்உள்ளமும்  
                                           
( போய் 
நான்கெட்ட வாபாடித் தெள்ளேணம் 
கொட்டாமோ 
என்று அறிந்து அறிவித்ததை 
அறியவும். 
 |