ப
பகுதிமேல் கெடுதல்
என்பதன் விளக்கத்தினைப் பரிமேலழகர்,
சுவைஒளி ஊறுஓசை நாற்றம்என்று
ஐந்தின்
வகைதெரிவான் கட்டே
உலகு
என்ற குறட்கு எழுதிய
இடத்துக் காணவும் ; பகுதி என்பதனை ஐம்பொறிகளாகிய பகுதி எனக் கொண்டு அவை கெடுதல் இன்பம்
எனக் கொள்ளினும் பொருந்தும். இது கருதியே உரன் என்னும் தோட்டியான் ஓர் ஐந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்புக் கோர்வித்து என்றனர். நாலடியாரும்,
மெய்வாய்கண் மூக்குச்
செவிஎனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினைக்-கைவாய்க்
கலங்காமல் காத்துய்க்கும்
ஆற்றல் உடையான்
விளங்காது வீடு பெறும்
என்று கூறுகிறது’ கெடுதல்
என்பது அடக்குதல் என்று பொருள் கொள்க.
சித்தி என்பன அணிமா,
மகிமா, கரிமா, இலகிமா. பிராப்த்தி, பிரகாமியம், ஈசத்துவம், வசித்துவம் என்பன, அணிமா
அணுவாகச் சுருங்கும் வன்மை, மகிமா உருவைப் பெருக்கும் வன்மை, கரிமா கனமாகும் வன்மை, இலகிமா
கனம் இன்மையாகும் வன்மை, பிராப்தி விரும்பியதை விரும்பியவாறு அடையும் வன்மை, பிராகாமியம்
கூடு விட்டுக் கூடு பாய்தல், ஆகாய கமனம் செய்தல், விரும்பிய போகங்களை இருந்த இடத்தில்
அடைதல், முக்கால உணர்ச்சி, தன் உடல் ஒளியால் எல்லாப் பொருள்களையும் காணல், முக்கால நிகழ்ச்சிகளை
அறிதல் ஆகிய வன்மை, ஈசத்துவம் எத்தகையோர்க்கும் மேம்பட்டு இருத்தலாம் வன்மை, வசித்துவம்,
சராசர பொருள்களைத் தன் வசம்ஆக்கும் வன்மை. இச்சித்திகள் கைவரப் பெறுதல் இன்பம் எனக்
கருதுபவர் உளர். இவ்வாறு இன்பத்திற்குரிய வழிகளைப் பலவாறு கூறுதலின், “வாதம் படர்ந்து வரும்திறன்”
என்றனர்.
|