இவற
இவற்றில் ஈடுபடாது செந்தமிழ்
அறிந்து போற்றுதலே கடனாகக் கொண்டவர் சேக்கிழார் ஆதலின், “வளம் கூடு செந்தமிழ் அருமை அறி ***
சிகாமணி” எனப்பட்டார்.
தேவாரத் திருமுறைகள்
சொல் வளம், பொருள் வளம் பொருந்தப் பெற்றமையின் வளம் கூடு செந்தமிழ் எனப்பட்டது. அல்லது
பொதுவாகத் தமிழ்மொழிக்கே இத்தொடரைப் பொருள் படுத்தினும் பொருத்தமே.
தமிழுக்கு வளமாவது
பல மொழிகள் தோன்றி அழிந்து போக, இது மட்டும் அழியாத தன்மையில் கன்னித் தமிழாக அன்றும்
இன்றும் இருந்து வருவதாகும். இருந்து வருவதோடு இன்றிப் பிற மொழிகட்குத் தாயகமாகவும் சில
மொழிகளை வென்று வெற்றியுடன் திகழ்வதும் ஆகும். இதனை,
பல்லுயிரும்
பலவுலகும்
படைத்தளித்துத்
துடைக்கினும்ஓர்
எல்லையறு பரம்பொருள்முன்
இருந்தபடி
இருப்பதுபோல்
கன்னடமும்
களிதெலுங்கும்
கவின்மலையா
ளமும்துளுவும்
உன் உதரத்து உதித்தெழுந்தே
ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல்
உலகவழக்
கழிந்தொழிந்து
சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து
வாழ்த்துதுமே
என்று மனோன்மணியமும்,
மறைமுதல் கிளர்ந்தவாயால்
மதிமுகிழ் முடித்தவேணி
இறைவர்தம் பெயரைநாட்டி
இலக்கணம் செய்யப்
( பெற்ற
அறைதரு பாடைஅனைத் தையும்வென்று
ஆரியத்தோடு
உறழ்தரு தமிழ்த்தெய்வத்தை
உள்நினைந்து ஏத்தல்
( செய்வாம்
|