New Page 1
குழந்தையும் முற்றத்தில்
குவிக்கப்பட்ட முத்துக் குவியலைக் கண்டதும் ஓடி காலால் இடறி எற்றி விளையாடியது.
இரண்டாம் குலோத்துங்கன்
நம் சேக்கிழார் பெருமானார்க்குத் தம் அரச அவையில் முதல் அமைச்சர் பதவி ஈந்து, உத்தமச்
சோழப் பல்லவர் என்ற பட்டத்தையும் சூட்டி மகிழ்ந்தனன். இதனை உமாபதிசிவாசாரியார்,
அத்தகைய புகழ்வேளாண்
மரபில் சேக்கி ழார்குடியில்
வந்தஅருள் மொழித்தே
வர்க்குத்
தத்துபரி வளவனுத்தன்
செங்கோ லோச்சும்
தலையளித் தவர்தமக்குத்
தனது பேரும்
உத்தமச்சோ ழப்பல்ல
வன்தான் என்றும்
உயர்பட்டம்
கொடுத்திடஆங் கவர்நீர் நாட்டு
நித்தனுறை திருநாகேச்
சுரத்தில் அன்பு
நிறைதலினால்
மறவாத நிலைமை மிக்கார்
என்று போற்றிப் பாடினர்.
இதனை உட்கொண்டே, “கொற்றவன் தரு முதன்மை கொண்டுமிளிர்” என்று கூறினர் திரு பிள்ளை அவர்கள்
(55)
5. மாயா மலம்கரும
மலம்இவைக் கேதுவாம்
மலம்வே
ரொடும்கழன்று
வலியதன் சத்திகெடு
மாறுதிரு அருள்பதிய
வந்துபதி செம்மலர்த்தாள்
ஆயாத எம்மனமும்
அகலாத தாள்அடியர்
அவிர்புதல்வர்
தோழர்தாங்கள்
அடைந்தமார்க்
கம்பொலிய எண்ணும் திருத்தாள்
அராவுரி நிகர்த்ததூசு
காயாத கால்நீத்த
மலரொடு விரித்தஇக்
கடையில்பெ
யர்த்துவைத்துக்
கருங்கொண்டல்
போல்வானும் மிகையெனக் கடல்சூழ்ந்த
காசினிஉ ளாரைஎல்லாம்
கூயா தரிக்குங் குணம்தழுவு
சேவையார்
குலசிகா மணிவருகவே
கொன்றைச் சடாடவியர்
மன்றைப் பராவியெழு
குன்றைப்
பிரான்வருகவே.
|