பக்கம் எண் :

512

             வாரானைப் பருவம்

சிவஞான சித்தியாரும் மலநீக்கும் மார்க்கத்தினை,

    பிணத்தினை ஒத்து வாழ்வோர்
        பின்நடைப் பிணங்கள் போல
    உணக்கியே உழல்வீர் உங்கள்
        உடல்உயிர் உணர்வும் எல்லாம்
    கணத்திடைத் தோன்றி மாயும்
        காயம் என்றறிந் தொருக்கால்
    வணக்குறீர் அரனை என்றும்
        வானவர் வணங்க வைப்பன்

என்கிறது.

    அருளே சத்தி என்பதைச் சிவஞான சித்தியார் நன்கு தெளிவுற,

அருளது சத்திஆகும் அரன்தனக் கருளை இன்றித்
தெருள்சிவம் இல்லைஅந்தச் சிவம் இன்றித் சத்தி இல்லை
மருளினை அருளால் வாட்டி மன்னுயிர்க் களிப்பன் கண்கட்
கிருளினை ஒளியால் ஓட்டும் இரவியைப் போல ஈசன்

என்கிறது.

    இறைவனது திருவருளைப் பல வகைகளில் பெறலாம்’ அப்பலவகைகளில் தாசமார்க்கமும், சத்புத்திர மார்க்கமும்.  சகமார்க்கமும், சன்மார்க்கமும் ஆகும்.  இந்நால்வகை மார்க்கங்களை விளக்கியவர்களே ஆளுடைய அரசர், ஆளுடைய பிள்ளையார், ஆளுடைய நம்பிகள், ஆளுடைய அடிகள் என்பவர்கள்.  அப்பர் தாதமார்க்கமாம் தொண்டு மார்க்கத்தைக் காட்டியவர் என்பது “என் கடன் பணி செய்து கிடப்பதே” என்று அருளியதனாலும் “நிலைபெருமாறு எண்ணுதியேல்” என்றதாண்டகத்தில் தொண்டு செய்ய வேண்டும் என்பதைத் தம் நெஞ்சிற்கு உபதேசம் செய்திருப்பதாலும் தெளியலாம்.

    திருஞான சம்பந்தர் சத்புத்திர மார்க்கத்தை விளக்க வந்தவர் என்பது அவர் அம்மை அப்பரிடம் அமுது பெற்றுச் சைவப் பயிரை வளர்த்துச் சிவனடி உற்றதை அவர் பாடல்