என
என்று எடுத்து இயம்பியுள்ளார்,
இதனைக் கற்பனைக் களஞ்சியம் துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்,
அறிந்து செல்வம்
உடையானாம்
அளகைப் பதியான்
தோழமைகொண்
டுறழ்ந்த கல்வி
உடையானும்
ஒருவன் வேண்டும்
எனஇருந்து
துறந்த முனிவர் தொழும்
பரவை
துணைவா நினைத்தோ
ழமைகொண்டான்
சிறந்த அறிவு
வடிவமாய்த்
திகழும் நுதல்கண்
பெருமானே
என்று நன்கு
விளக்கியுள்ளனர்
மணிமொழியார் சன்மார்க்கமாகிய
ஞானமார்க்கத்தை உணர்ந்தவர் என்பது அவர் ஞானா சிரியனை அடைய அவாவுற்று அங்ஙனமே பெற்று
அருள் உபதேசம் உற்று ஞான மார்க்கத்தினை நிலவுலகில் பரப்பினர் என்பதற்குரிய சான்றுகள் பல
அவர்தம் வாசகத்தில் உண்டு.
அருபரத் தொருவன்
அவனியில் வந்து
குருபரன் ஆகி
அருளிய பெருமை
என்றும்,
ஊனை நாடகம் ஆடு
வித்தவா
உருகி நானுனைப்
பருக வைத்தவா
ஞான நாடகம் ஆடு
வித்தவா
நைய வையகத்துடைய
இச்சையே
என்ற அவர்தம் திருவாசகப்
பாடலைக் காண்க.
மாணிக்க வாசகர் ஞானம்
பெற வேண்டி ஞானாசிரியரைத் தேடிவந்த நிலையினைக் கடவுள் மாமுனிவர்,
மர்க்கட விலங்கு
தன்னால் வளங்கெழு விளைவின் மேவும்
நற்கனி கொள்ள வேண்டி
நயந்துகல் எறிவார் போலச்
சற்குரு உளனோஏன்று
நாடுவார் தர்க்கம் எல்லாம்
சொற்கலை ஞானசைவர்
தம்மொடும் சொல்ல லுற்றார்
என்று பாடி இருத்தலால்
அறியலாம்.
|