New Page 1
மேலே சொல்லப்பட்ட
நான்கு மார்க்கங்களும் இறைவனை அடைதற்குரிய மார்க்கம் என்பதைச் சிவஞான சித்தியார்,
சன்மார்க்கம் சகமார்க்கம்
சற்புத்திர மார்க்கம்
தாதமார் கம்என்னும்
சங்கரனை அடையும்
நன்மார்க்கம் நால்அவைதாம்
ஞான யோகம்
நற்கிரியா சரியைஎன
நவிற்றுவதும் செய்வர்
என்று கூறுகிறது.
சேக்கிழார் மேலே
கூறப்பட்ட நால்வகை நெறியினையும் எண்ணும் இயல்பினர்.
தாசமார்க்கத்
தலைவரான அப்பரது சேவடிகளைச் சேக்கிழார் வணங்கிப் போற்றினர் என்பதை,
அடியேன் ஆதரவால் ஆண்டஅர
சின்சரிதப்
படியையான் அறிந்தபடி
பகர்ந்தேன்அப் பரமுனிவன்
கடிமலர்மென் சேவடிகள்
கைதொழுது
என்ற பாடலால் அறிக.
சத்புத்திரமார்க்கத்
தலைவரான திருஞான சம்பந்தரது பாதமலரைப் போற்றினர் என்பதை,
அருந்தமிழ்ஆ கரர்சரிதை
அடியேனுக் கவர்பாதம்
தரும்பரிசால் அறிந்தபடி
துதிசெய்தேன் தாரணிமேல்
என்ற பாடல் உணர்க.
சகமார்க்கமாம் தோழமை
நெறியை விளக்கிய சுந்தரர் திருவடிகளைச் சேக்கிழார் போற்றியுள்ளனர் என்பது,
மலர்மிசை அயனும்
மாலும்
காணுதற் கரிய
வள்ளல்
பலர்புகழ் வெண்ணெய்
நல்லூர்
ஆவணப் பழமை
காட்டி
|