பக்கம் எண் :

உல

516

             வாரானைப் பருவம்

        உலகுய்ய ஆண்டு கொள்ளப்
            பெற்றவர் பாதம் உன்னித்
        தலைமிசை வைத்து வாழும்
            தலைமைநம் தலைமை ஆகும்

என்ற பாடலில் நன்கு வெளிப்படையாகத் தெரிகிறது.

    ஆனால், சன்மார்க்கச் செந்நெறியினரான மணிமொழியாரது மலரடி வணங்குதற்கு நேரடியான வாய்ப்புச் சேக்கிழார்க்கு இன்றேனும், அவரது திருவாசத்தினின்றும் பல அரிய கருத்துக்களைத் தம் நூலில் எடுத்து ஆண்டுகொண்டு அவரது பொன்னார் திருவடிகளைத் தம் உள்ளத்தால் போற்றி வணங்கியவர் என்பது பெரியபுராணச் செய்யுட்களால் நன்கு விளங்குகிறது.  அவற்றுள் ஒன்று,

        ஆங்கவர் மனத்தின் செய்கை
            அரனடிப் போதுக் காக்கி
        ஓங்கிய வாக்கின் செய்கை
            உயர்ந்தஅஞ் செழுத்துக் காக்கித்
        தாங்குகைத் தொழிலின் செய்கை
            தம்பிரான் அடியார்க் காகப்
        பாங்குடை உடையும் கீளும்
            பழுதில்கோ வணமும் நெய்வார்

என்பது.  இது,

    சிந்தனைநின் தனக்குஆக்கி நாயி னேன்தன்
        கண்ணிணைநின் திருப்பாதம் போதுக் காக்கி
    வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்குன்
        மணிவார்த்தைக் காக்கி

என்னும் திருவாசக அடிகளை ஒட்டியது அன்றோ?

    இவ்வாறான நான்குநெறிகளின் பொருள்களைச் சேக்கிழார் தமது பெரிய புராணத்தில் விரித்து வைத்து அன்பர்கள் கொள்ளச் செய்த அருமையினைக் கண்டு “திரு.  பிள்ளை அவர்கள் “பொலிய எண்ணும்” என்றனர். ஆடையின் மென்மைக்கு அரவின் தோலை உவமை காட்டினர்.  இவ்வாறு