பக்கம் எண் :

சங

 

       வாரானைப் பருவம்

517

சங்கநூலின் பல இடத்தும் இவ்வுவமை கூறப்பட்டுள்ளது.  “அரவுரிஅன்ன அறுவை” என்ற பொருநர் ஆற்றுப் படை புகல்வதைக் காண்க.  இதனால் நம் தமிழ் நாட்டவர் மிக மெல்லிய ஆடைகளை நெய்தமை தெரிதல் காண்க.

    சேக்கிழார் பெருமானார் மேலே சொல்லப்பட்ட சிறப்புக்களுக்குக் காரணர்.  ஆதலின், அவர்தம் திருவடிகளை அணுகுபவர்கள், உள்ளத்தில், வைத்துப் போற்றுகின்றனர் ஆதலின், அத்தகைய திருவடிகளைப் பெயர்த்து வருமாறு வேண்டுகின்றனர்.

    காயாத கால் நீத்த மலர் என்பன மல்லிகை முல்லை போல்வன.

    பிரம்மா விஷ்ணு உருத்திரர் என்னும் மூவருள் திருமாலுக்குக்  காத்தல் தொழிலை ஏற்று நடத்துமாறு முக்கண் மூர்த்தியின் கட்டளை இருத்தலின், திருமால் காக்கும் தெய்வம் ஆயினர்.  அவரும் உழவர் உழுது பயிரிட்டு உலகை ஆதரிப்பதனால் தேவை இல்லை என்று கூறி வேளாளர் சிறப்பை விளக்கக் கூய் ஆதரிக்கும் குணம் தழுவும் சேவையார் குலம் என்றனர்.

    பலகுடை நீழலும் தம்குடைக்கீ்ழ் காண்பர்
    அலகுடை நீழ லவர்

    “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்று குறட்பா கூறுவனவற்றைக் காண்க.  உழவர்களே உலகை ஆதரித்துப் பசியின்றி வைப்பர் என்பது,

        கார்நடக்கும் படிநடக்கும்
            காரளர் தம்முடைய
        எர்நடக்கும் எனில்புகழ்சால்
            இயல்இசை நாடகம்நடக்கும்
        சீர்நடக்கும் திறம் நடக்கும்
            திருவறத்தின் செயல்நடக்கும்
        பார்நடக்கும் படைநடக்கும்
            பசிநடக்க மாட்டாதே

என்ற ஏர் எழுபது பாடலால் தெரியவருகிறது.