பக்கம் எண் :

இத

 

       வாரானைப் பருவம்

523

    இத்தலத்திற்குக் காரைக்கால் அம்மையார் மூத்த திருப்பதிகங்கள் இரண்டும், சம்பந்தர் பதிகம் ஒன்றும், அப்பர் பதிகங்கள் இரண்டும், சுந்தரர் பதிகம் ஒன்றும் உள்ளன.  காரைக்கால் அம்மையார் “அரவா நீ ஆடும்போது உன் அடியின் கீழ் இருக்க” என்று வரம் வேண்டியதால், அவ்வேண்டுகோட்படி ஊர்த்துவத் தாண்டவமூர்த்தியின் சபையில் பணிந்து இருப்பதைக் காணலாம்.

    திருஞான சம்பந்தர், காரைக்கால் அம்மையார் திருத்தலையாலே நடந்த பதி திருவாலங்காடு ஆதலின் அதனைக் காலால் மிதிக்கலாகாது என்று அஞ்சிப் பழையனூரில் தங்கி விட இறைவர், அவர் கனவில் தோன்றி “நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு” என்று அறிவிக்க விழித்தெழுந்த ஆளுடைய பிள்ளையார்,

துஞ்ச வருவாரும் தொழுவிப்பாரும் வழுவிப்போய்
நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப்பாரும் முனைநட்பாய்
வஞ்சப்படுத் தொருத்தி வானாள்கொள்ளும் வகைகேட்டு
அஞ்சும் பழயனூர் ஆலங்காட்டெம் மடிகளே

என்று பாடியருளினார். இக்குறிப்புக் கொண்டு காரைக்கால் அம்மையார் திருஞானசம்பந்தர்க்கு முற்பட்டவர் என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

    இன்னோரன்ன சிறப்புக்குரிய வேளாளர் குலத்தில் உதித்த பெருமைக்குரியவர் சேக்கிழார் என்பதைத் திரு. பிள்ளை அவர்கள், நெஞ்சார நெகிழ்ந்து பாடுகிறார்.  பெரிய புராணப் பாடல்களைச் சேக்கிழார் திருவருட்கவியால் பாடினர் ஆதலின், “அருள்மழை பெய் கொண்டல்” எனப் பட்டனர்.

    குன்றத்தூரில் பெரிய பெயரி கட்டடங்கள் காணப்படுதலின்,  அவை குன்றுகளுக்கு உவமையாகக் கூறப்பட்டன.

    முன்னுள்ள குன்றை என்னும் சொல் சிறுமலையினையும் பின்னுள்ள குன்றை குன்றத்தூரையும் உணர்த்தி நிற்கின்றன.                                                        

(57)