| 
New Page 1
 
முந்தூழ்-மூங்கில், தெள்ளு-தெளிவான 
அறிவுடைய, துலாக்கோல்-தராசுக் கோல், மோலி-கிரீடம், முந்தூழ்க் கோல்-ஏகதண்டம், திரிதண்டம் 
என்பன.  சிறுகோல்-சிறிய தாற்றுக்கோல், குலத்தில்-வோளார் குலத்தில். 
     விளக்கம் :  இப்பாடலில் 
திரு பிள்ளை அவர்கள் வேளாளர் சிறுகோல் பிடித்து ஏர் உழுவதினால்தான் பிரம்மாதி விஷ்ணுக்களும் 
தாம் தாம் தாங்கவேண்டிய கோலுடன் திகழவேண்டி உள்ளது.  அவ்வேளாளர் அச்சிறு கோலைத் தம் கையில் 
பிடித்திலரேல், எவரும் கோலைத்தாங்க இயலாது என்பதை எடுத்து இயம்பியுள்ளனர். 
    ஆதிகாரம் நடத்துவோர் 
தம் கோல் கையில் வைத்திருத்தல் மரபு. இதனைப் பரஞ்சோதி முனிவர், நந்தியம் பெருமானுக்கு 
வணக்கம் செலுத்தும் பாடலில் இனிதுற, 
வந்திறை அடியில் தாழும் 
வானவர் மகுட கோடி 
பந்தியின் மணிகள் சிந்த 
வேத்திரப் படையால் தாக்கி 
அந்தியும் பகலும் தொண்டர் 
அலகிடும் குப்பை ஆக்கும் 
நந்தியம் பெருமான்பாதம் 
நகைமலர் முடிமேல்வைப்பாம் 
என்று பாடிக்காட்டியுள்ளதை 
ஈண்டு நினைவு படுத்திக் கொள்ளவும். 
    பிரம்மன் கையில் 
யோகதண்டமும், திருமால் கையில் அம்பாகிய கோலும், பிரமசரியர் கையில் கல்யாண முருக்கங்கோலும், 
நான்காம் ஆசிரமத்தார் ஆகிய சந்நியாசிகள் கையில் மூங்கில் கோலும் பிடிப்பதற்குக் காரணம் 
வேளாளர் தம் கையில் தாற்றுக் கோல் பிடிப்பதனால் என்பதை ஆசிரியர் திறம்பட விளக்கியுள்ளனர். 
முருக்கங்கோல் ஏந்துவதன் 
கருத்து வேதத்தின் பொருள் எளிதில் கொள்ளும் சக்தியினைப் பெறுவதற்கு என்பர்.  சந்நியாசிகள் 
மூங்கில்கோல் உடையர் என்பதைத் திருக்கோவையார், 
 |