| 
New Page 1
 
கொண்டு செல்ல, ஏழு 
ரிஷிகள் வேத மொழிகளால் துதித்தனர்.  அத்துதியின் விசேடத்தால் அச் சந்திரன் மிக்க ஒளி 
பெற்றனன்.  உலகுக்கு ஒளிதரும் பேறும் பெற்றனன்.   
    காக்கும் தெய்வம் 
திருமால்,   சந்திரனும்   பொருள்களின்   விளைச்சலுக்குப்   பால் சுரப்பித்து உலக உயிர்களைக் காப்பவன் 
ஆவான்.  ஆகவே,  திருமால் காக்கவேண்டிய நியதி இல்லை எனச் சந்திரனை உயர்த்திக் கூறினார்.  
திருமால் கையில் சங்கு உண்டு.  “செங்கண்மால் தடக்கையில் சங்கம்” என்றனர் சிவப்பிரகாசர். 
    சேக்கிழார் 
பெருமானாரும் அன்பர்களது கைகளாகிய தாமரைகள் குவிய விளங்குபவர்.  வீடு முழுதும் நெல் (சாலி) நிரம்பக்கொண்டு 
மகிழ்பவர்.  புண்ணியவான் திருக்கண்முன் காட்சி தந்து பொலிபவர்.  சிவனார் கண் போல் 
பொலிபவர்.  வேளாளர்கள் கங்கா நதி சம்பந்தமுடையவர்கள்.  அவர்களை கங்கை புத்திரக்கள் 
என்று கூறுதல் உண்டு.  கரிகாலன் இவர்களைக் கங்கைக் கரையினின்று தென்னாட்டில் குடி ஏற்றினன் 
என்று கூறும் வரலாறும் உண்டு. அத்தகைய வேளாள குலத்தினைச் சார்ந்தவர் சேக்கிழார் ஆதலின், 
வரநதிப் பந்தம் என்றனர்.  வேளாளர்கள் உலகுயிர்களை உழவு வளத்தால் காப்பவர்.  அதனால் திருமால் 
உயிர்களைக் காத்தல் மிகை ஆயிற்று.  இக்காப்புத் தொழில் வேளாளராம் சேக்கிழார்க்கும் உண்டு.  
இன்னோரன்ன காரணங்களால் சந்திரனும் சேக்கிழாரும் ஒருவரை ஒருவர் ஒப்பாவர்.  எனவே, புலவர் 
சந்திரனைத் தம் பாட்டுடைத் தலைவராம் குழந்தையுடன் ஆட அழைக்கின்றார்.  இச்செய்யுளும் சிலேடை 
அணி.  எழுநிலை மாடங்கள் குன்றத்தூரில் உள என்பது உயர்வு நவிற்சி அணி.  ஈற்றடிகளில் குன்றத்தூர் 
மாடமாளிகைகளைப் புலவர் புகழ்ந்துள்ளனர். 
    இப் பாடலும் சாம 
உபாயத்தால் சந்திரனை அழைத்தலாகும்.  சாம உபாயமாவது சமாதான முறையில் அழைத்தலாம்.                                                   
   
(63)  
 |