| 
த
 
திருநின்ற செம்மையே 
4.  
திருநின்ற செய்யுள்புகல் 
நீற்றறையுள் அருகந்தர்  
        சிந்தைவெந் 
திடஅமர்ந்தும் 
    செறிதுயர்க் கடல்மறக் 
கல்லொடவர் ஆழஓர் 
        திரைக்கடல் 
கல்மிதந்தும் 
    கருநின்ற கண்டர்அருள் 
வெளிசெய்நா அரசர்முன் 
        கருதுபுகழ் எழுவோரையும் 
    கருத்திடை அருத்தியின் 
இருத்திமற் றவர்பதம் 
        காதலித் துத்துதிப்பாம் 
    தருநின்ற செங்கைத் 
தலம்குவித் திடுமுனம் 
        தையல்ஒரு பாகர்தொண்டர் 
    சரித்திரம் 
அனைத்தும்ஒரு வாதுற நிரம்பத் 
        தவமான அறைக்குவிக்க 
    உருநின்ற சீர்கொள்புலி 
யூர்க்கோட்டம் மேயதற் 
        கொப்பஉல கேத்தநாளும் 
    ஓங்குபுலி யூர்க்கோட்டம் 
மேயகுன் றத்தூர் 
        ஒருத்தரைக் 
காக்கஎன்றே 
 
  [அ-கு.]  
திருநின்ற-கற்பக விருட்சம் போன்ற, முனம்-முன்னே.  தையல் ஒரு பாகர்-உமாதேவியாரைத் தமது 
இடப்பக்கம் கொண்ட சிவபெருமானார். ஒருவாது-ஒன்று கூடக் குறையாது, உற-உள்ளத்தில் நன்றாகப் 
பொருந்த தவா-குறையாத உரு-அழகு ஏத்த-போற்ற, ஒருத்தர்-ஒப்பற்ற சேக்கிழார், திருநின்ற செய்யுள் 
என்பது சுந்தரரது திருத்தொண்டத் தொகையின் நான்காவது பாடல், புகல் சொல்லும், நீற்றறை-சுண்ணாம்பு 
காளவாய், அருகந்தர்-சமணர். செறி-மிகுந்த, மறக்கல்-பாவக்கால், திரை-அலை கரு-விஷம், நின்ற-பொருந்திய. 
கண்டர்-கழுத்தையுடைய சிவபெருமான், நாவரசர்-திருநாவுக்கரசர், எழுவோர்-ஏழு அடியார்கள், அருத்தியின்-அன்போடு, 
பதம்-பாதம் 
 |