4
4. சாறுசால் வீதித்
திருத்தில்லை அம்பலம்
தன்னில்எஞ்
ஞான்றும்நின்று
தாண்டவம் நவிற்றிஉல
உய்யச் செயும்பரம
சற்குரவன் இனிதுசெய்யும்
பேறுமே வியஅனுக்
கிரகம்முழு தும்பெற்ற
பெரியோன்
இவற்குவானோர்
பேணுகுர வன்பாங்கர்
நிக்கிரக மேபெற்ற
பேதைநீ மாற்றுயர்ந்து
வீறுசெம்
பொன்னோ டிரும்பொத்த போதினும்
மேஒப் புறாமைமண்ணும்
விண்ணும்உண
ரும்கருணை நினைஅழைத் தஃதிந்த
விதம்ஓர்ந்து
கொடியோடும்வான்
ஆறுதோய் சூளிகைக்
குன்றைநகர் ஆளியுடன்
அப்புலீ ஆடவாவே
அருளுருத்
தேசுபொலி அருள்மொழித் தேவனுடன்
அம்புலீ ஆடவாவே
[அ. சொ.] சாறு-திருவிழாக்கள், சால்-மிகுந்த, திரு-சிறந்த, தில்லை-சிதம்பரத்தில் உள்ள, அம்பலம்-பொற்சபை, எஞ்ஞான்றும்
எக்காலத்தும், தாண்டவம்-நடனம், நவிற்றி-செய்து, உய்ய-பிழைக்க, பரமசற்குரவன்-மேலான
ஞானாசாரியனாகிய இறைவன். வானோர்-தேவர், பேணு- போற்றும், குரவன் பாங்கர்-பெரியோனாகிய
பிரகஸ்பதியிடத்தில், அநுக்கிரகம்-அருளிப்பாடு, நிக்கிரகம்-சாபம், கோபத்தால் தள்ளப்படுதல்.
வீறு-சிறந்த, மண்ணும்-இம்மண்ணுலகமும், விண்ணும் - மேலுலகமும், ஓர்ந்து- ஆராய்ந்து அறிந்து, இந்த
விதம்-இந்த விடயத்தை, வான் ஆறு-ஆகாயகங்கை, சூளிகை-நிலாமுற்றம், அழைத்தஃது அழைத்தது. இச்சொல்லின்
இடையில் ஆய்த எழுத்துத் தோன்றியது விரித்தல் விகாரம் ஆகும்.
விளக்கம் : இப்பாடலும்
சேக்கிழாருக்கும் சந்திரனுக்கும் உள்ள வேற்றுமையினை உணர்த்துகிறது. தில்லைக்
|