பக்கம் எண் :

New Page 1

 

       அம்புலிப் பருவம்

567

    சேக்கிழார்க்கு ஒரு புடை சந்திரன் ஒப்பாதல் இரும்பும் பொன் என்னும் பெயர் அளவில் பொன்னுடன் ஒப்புமையாதல் போன்றது. அங்ஙனம் இருந்தும் தமது கருணைப் பண்பால் சந்திரனை அழைத்தது எனச் சேக்கிழாரின் அருள் இரக்கத்தினை ஆசிரியர் போற்றினர்.  கொடிவான் என்றது குன்றை நகரின் மாளிகையின் உயர்ச்சியைக் குறித்த வாறாம்.  அது போலவே குன்றை நகர் மாளிகையின் நிலா முற்றம் ஆகாய கங்கை தோயும் என்றது அதன் உயர்ச்சியினை உயர்வு நவிற்சி அணியின்பால் வைத்துப் பாடியதே அன்றி வேறன்று.  இதுவும் பேத உபாயம் தோன்றப் பாடப்பட்டது.  

(65)

5.     எம்மைஇனி தாள்பவன் செம்மைமதி யவன்நீ
           இயற்கையே வெண்மைமதியோன்
       எற்றைக்கும் மிகுதண்மை யுடையரோ டுறவுகொளும்
           இயல்பினால் எங்கள்ஐயன்
       வெம்மையுடை யவர்களொடு மதிதொறும் மதிதொறும்
           விராய்உறவு கொள்ளுவோன்நீ
       வியக்கும்ஒரு தன்மையோன் எங்கள்கிரு பாமூர்த்தி
           மெய்ம்மைஒரு கால்வளருவாய்
       மும்மையுல கறியஒரு கால்தேய்கு வாய்இவை
           முயங்காதொர் கால்ஒழிகுவாய்
       மொழியும்நீ இவைஓர்ந்தும் ஆடவா என்றது
           முழுக்கருணை காண்எஞ்ஞான்றும்
       அம்மைஅனை யார்மருவு குன்றைநகர் ஆளியுடன்
           அம்புலீ ஆடவாவே
       அருளுருத் தேசுபொலி அருள்மொழித் தேவனுடன்
           அம்புலீ ஆடவாவே

    [அ. சொ.]  செம்மை-செம்மையான, மதியவன்-அறிவுடையவன், அதாவது செம்பொருள் காணும் அறிஞர், வெண்மை மதியோன்-வெள்ளிய சந்திரன், வெள்ளறிவுடையவன்.  அறிவீனன் என்பது கருத்து.  எற்றைக்கும்-எக்காலத்