பக்கம் எண் :

New Page 1

568

             அம்புலிப் பருவம்

தும், தண்மை-குளிர்ந்த அருட்பண்பு, இயல்பினால்-தன்மையால், வெம்மையுடையவர்கள்-பன்னிரண்டு சூரியர்கள், மதிதொறும்-மாதந்தோறும், விராய்-கலந்து, ஒருகால்-ஒரு பட்சத்தில், மும்மை உலகு-சுவர்க்க, மத்திமம் பாதாளமாகிய மூன்று உலகங்கள், இவை-இவ்வாறான தேய்தலும், வளர்தலும், முயங்காது-சேராமல்படி, ஓர்ந்தும்-அறிந்தும், எஞ்ஞான்றும்-எக்காலத்தும், அம்மை - தாய், அனையார்-போன்றவர், மருவு-சேரும், அ+மை எனப்பிரித்து அந்த மேகம் போன்ற கொடையுடையவர் எனினும் ஆம்.

    விளக்கம் :  இப் பாடலும் சேக்கிழார்க்கும் சந்திரனுக்கும் உள்ள வேற்றுமையினைக் கூறுகிறது.  சேக்கிழார் அன்பர்களை என்றும் அடிமை கொண்டு அருள்பவர் ஆதலின் எம்மை இனிது ஆள்பவன் என்றனர்.  சேக்கிழாரது அறிவு செம்பொருள் காணும் அறிவு.  செம்பொருளாவது இறைவன்.  இதனைச் “சிவன் எனும் நாமம் தனக்கேயுடைய செம்மேனி அம்மான்” என்னும் அப்பர் அருள் மொழியால் தெளியலாம்.  திருவள்ளுவரும் இத்தகையவரை “செம்பொருள் கண்டார்” என்றே குறிப்பிட்டுள்ளனர்.  சந்திரன் வெண்மை மதியோன்.  அதாவது வெள்ளிய நிறமுடையன் இங்குக் கருதிய பொருள் பேதமையான அறிவுடையவன் என்பதாம்.  இப்பொருட்டாதலைத் திருவள்ளுவர் “வெண்மை எனப்பதுவது யாதெனில்” என்ற தொடரில் குறிப்பிட்டுள்ளதைக் காணவும்.    பறிமேலழகர் வெண்மை என்னும் சொல்லுக்கு “அறிவு முதிராமை” என்று விளக்கம் தந்ததைக் காண்க.  கம்பர் இப் பொருளில் இச் சொல்லை ஆண்டதை “வெண்மை இல்லை பல கேள்வி மேவலால்” என்ற தொடரில் அறிக.  நாலடியாரும், “வெண்மையுடையார் விழுச் செல்வம்” என்கிறது.  சேக்கிழார் இறைவனடி சேர்ந்த மெய்யன்பர்களிடத்தும், மாலற நேயம் மலிந்தவரிடத்தும் அன்புடையராய், அவர்களோடு உறவு கொண்டாடுபவர்.  இதனை இவர், “மயலில்சீர்த் தொண்டனாரை யான்அறி வகையால் வாழ்த்தி, உம்பர்பிரான் காளத்தி உத்தமர்க்குக் கண்ணப்பு நம்பெருமான்” என்றும், “தூது கொள்பவ