New Page 1
[அ. சொ.]
குறையுடைய பாம்பு - இராகு கேது என்னும் கிரகங்களாகிய பாம்புகள். ஈண்டு ராகுவைக் குறித்தனர்,
குலைகுலைந்து - நடுநடுங்கி, உழல்வை - திரிவை. கோமான்-தலைவராம் சேக்கிழார், மணிச்சூட்டு-மணிமுடி,
மோட்டு-பருத்த, குரு-நிறம், துத்தி-புள்ளிகளையுடைய, பணாடவி-பாம்புப்படம், மன்றுள்-பொற்சபையுள்,
நாணும்-கூசும், ஈன்ற-பெற்ற, பரவை-கடல், பாற்கடல், இலகுவே-எளிதில், நெல்நுனை-நல்லின் நுனி,
தனையும்-அளவும், தூக்கில்-பாட்டில், அறை-வரை அறுக்கப்பட்ட, வானயாறு-ஆகாய கங்கை, திடர்-மேடு.
விளக்கம் :
இப்பாட்டும் சேக்கிழார்க்கும் சந்திரனுக்கும் உள்ள வேற்றுமைகளைக் காட்டுகிறது. ராகு சந்திரனை
உண்டு உமிழ்கின்றான் என்பதைச் சந்திரா கிரணத்தில் அறிகிறோம். இங்ஙனம் ராகு உண்டு உமிழ்கின்ற
வரையில் சந்திரன் ஒளி மாழ்கி இருப்பதால், சந்திரனை ஒரு பாம்பு எடுத்து உமிழ்ந்திட உழல்வை
என்றனர்.
சைம்மிகேயன் என்பவன்
பாம்பு வடிவினன். அவன் அமுதம் பெறத் தேவர்களினிடையில் தன் உருமாறி அமர்ந்திருந்தான்.
அமுதத்தையும் உண்டான். இவனைச் சூரியசந்திரர்கள் அமிர்தத்தைப் பங்கிட்டுக்கொண்டுவந்த திருமாலுக்குக்
காட்டிக்கொடுத்தனர். உடனே திருமால் அமுதத்தை முகக்கும் அகப்பையால் அவனைப் புடைத்தனர்.
அவன் அமுதுண்ட காரணத்தால் இறப்பினை அடையாமல் தலைவேறு உடல்வேறாகி இராகு, கேது என்ற
இருகோள்களாகிக் கோள் சொல்லிய சூரியசந்திரர்களைச் சிற்சில சமயங்களில் பீடித்துவருகின்றனன்.
இது புராணக்கதை. இதனால் “குறையுடைய பாம்பு ஒன்று” என்றனர் ஈண்டு ஒன்று என்றது இராகுவை என்க.
ஆதிசேடன் என்பவன்
பாம்புகட்கு எல்லாம் அரசன். அவனுக்கு ஆயிரம் தலைகள் உண்டு. அவன் தன் முடிகளில் நாகரத்தினம்
என்னும் மணியை உடையவன். அவனது படங்களில் புள்ளிகள் உண்டு. இத்தகையவன் அறிவில்
|