| 
என
 
என்று பாடியதோடு இன்றி, 
அவர் தாம் உயர்ந்த நிலையினைத் திருநீலக் குடிப் பதிகத்தில், 
    கல்லி னோடெனைப் 
பூட்டி அமண்கையர் 
    ஒல்லை நீர்புக 
நூக்கஎன் வாக்கினால் 
    நெல்லு நீர்வயல் 
நீலக் குடிஅரன் 
    நல்ல நாமம் நவிற்றிஉய்ந் 
தேன் அன்றே 
என்றும் குறிப்பிட்டுள்ளார்.  
சேச்கிழார் அப்பரைக் கட்டி இருந்த கல் மிதந்து வந்து கரையில் சேர்த்ததைச் செவ்வையாக, 
    பெருகிய அன்பினர் 
பிடித்த பெற்றியால் 
    அருமல ரோன்முதல் 
அமரர் வாழ்த்துதற் 
    கரியஅஞ் செழுத்தையும் 
அரச போற்றிடக் 
    கருநெடும் கடலினுள் 
கல்மி தந்ததே 
என்றும், 
 
    வாய்ந்தசீர் 
வருணனே வாக்கின் மன்னரைச்  
    சேர்ந்தடை கருங்கலே 
சிவிகை ஆயிட 
    ஏந்தியே கொண்டெழுந் 
தருளு வித்தனன் 
    பூந்திருப் பாதிரிப் 
புலியூர்ப் பாங்கரில் 
என்றும் பாடியுள்ளனர். 
இன்னோர் அன்ன குறிப்புக்களே  “ நீற்றறையுள்  *** நாவரசர் “  என்னும் அடிகளில்பொருந்தியிருத்தல் 
காண்க. 
    திருநாவுக்கரசரது அற்புத 
நிகழ்ச்சிகளைக் கண்ட அருகந்தர் அவலக்கடலி்ல் ஆழ்ந்தனர் ஆதலின், “அருகந்தர் சிந்தை வெந்திட“ எனப்பட்டது.  
கடல் அலைகளாலும் துன்பம் தருதலின்  “செறிதுயர்க் கடல்“  எனப்பட்டது, கல் ஒன்றும் அறியாப் 
பொருளே ஆயினும் அப்பரைப் பிணித்தற்குத் துணையாய் இருந்தமையின், பாபம் உற்றது.  ஆகவே, இது 
 
“மறக்கல்“  எனப்பட்டது, சேக்கிழார் தம் திருவாக்கில் ஆணவத்தை “மலக்கல்“ எனச்சூட்டினார்.  
கல்கடலில்  மிதத்தல் என்றும் நிகழா நிகழ்ச்சி.  இவ்வரிய 
 |