பக்கம் எண் :

New Page 1

604

             அம்புலிப் பருவம்

    “இசைநிறை அசைநிலை பொருளொடு புணர்தல்என்
     றவைமூன் றென்ப ஒருசொல் அடுக்கே”

என்பர். ஈண்டுப் பொருளொடு புணர்தல் பற்றி இவ்வடுக்கு வந்துளது, மேவுவேன் மேவுவேன் என்று எதிர்காலத்தில் இருக்க வேண்டியது மேயினேன் மேயினேன் என்றது காலவழு அமைதிபற்றி ஆகும்.  இவ்வாறு வரப்பெறும் என்பதற்கும் தொல்காப்பியர்,

    வாரார்க் காலத்தும் நிகழும் காலத்தும்
    ஓராங்கு வரூஉம் வினைச்சொல் கிளவி
    இறந்த காலத்துக் குறிப்பொடு கிளத்தல்
    விரைந்த பொருள என்மனார் புலவர்

என்று விதிவகுத்துக் கூறினர்.

    சேக்கிழார் அவதரித்த தலம் ஆதலின், “விண்ணவர் விழையும் குன்றை” என்றனர்.  இப்பாடல் தண்ட உபாயத்தால் சந்திரனை அழைத்தலைக் கூறுகிறது.     

(71)