| 
New Page 1
 
பையரா வணிந்த வேணிப் 
பகவனே அனைய தங்கள் 
ஐயனாம் விழாப் புத்தேள் 
ஆயிடை அடைந்தான் ஆகச் 
செய்யதாள் வழிபாடின்றித் 
தேவர்கோன் இருந்தான்  
                                        அந்தோ 
தையலார் மயலில்பட்டோர் 
தமக்கொரு மதியுண் டாமோ 
என்ற அப்புராணப் பாடலால் 
அறிக.  இது போல இருக்கை நின்று எழாதிருந்த காரணத்தால் சேக்கிழாராம் குழந்தை சிற்றில் 
சிதைத்தனர் என்றனர்.  இருந்தாலும் சிற்றில் அமைத்த சிறுமையர் தம் குற்றம் உணர்ந்து 
‘தருக்கி இருந்திலம்’ என்பதால் அவர்தம் பணிமொழி புலனாகிறது. 
    திரு. பிள்ளையவர்கள் 
தொண்டை நாட்டுச் சோலை வளம் கூறும்போது, அச்சோலைகள் தெய்வலோகச் சோலை அளவு சென்று வண்டுகள் 
மொய்க்கப் பெற்று விளங்கின என மரங்களின் உயர்ச்சியினை உயர்வு நவிற்சி அணி தோன்றப் 
பாடியுள்ளனர். 
    தெய்வலோகச் சோலைகளில் 
கற்பகவிருட்சத்தில் வண்டுகள் மொய்க்கமாட்டா.  ஆனால், தொண்டை நாட்டுச் சோலையில் உள்ள 
மரங்கள் தெய்வலோகச் சோலையுடன் கற்பகத்தருவுடன் கலந்து இருந்தமையில் வண்டுகள் மொய்த்த 
வண்ணம் இருந்தன.  இங்ஙனம் தங்கள் சோலையில் வண்டுகள் மொய்ப்பதைக் கண்டதனால்தான் தேவர்கள் 
நடுங்கி நிலைகுலைந்தனர். 
    தண்டக நாடு என்பது 
தொண்டை நாடாகும். தொண்டை நாடு தண்டக நாடு என்ற பெயரும் உடையது என்பது, 
        முக்கணான் கணநா 
தர்க்கு 
            முதன்மைத்தூண் 
டீரன் ஆண்டு 
        மிக்கதுண் டீரன் 
நாடாய்த் 
            தண்டக வேந்தன் 
தாங்கித் 
 |