தக
தக்கதண் டகன்நன் நாடாய்த்
தபனன்மா குலத்துச்
சோழன்
தொக்கதார்த் தொண்ட
மான்காத்
தாயது தொண்டை
நாடே
என்ற செய்யுளால் தெரிய
வருகிறது. தண்டகன் என்பவன் இட்சுவாகுவின்மகன். இவன் தன் பிதாவால் சபிக்கப்பட்டு விந்த
மலையினை அடைந்தனன். அங்கு நாடு கண்டு ஆண்டு வந்தனன். அங்கும் அகத்தியரால் சபிக்கப்பட்டனன்.
அதனால் நாடு அழிந்து தண்டக வனம் ஆயிற்று. பின்பே அது தொண்ட நாடாயிற்று.
செருக்கு எனினும்
பெருமிதம் எனினும் ஒன்று. இது எண்வகை மெய்ப்பாடுகளில் ஒன்று. எண்வகை மெய்ப்பாடுகள் இன்ன
என்பதை,
“நகையே அழுகை இனிவரல்
மருட்கை
அச்சம் பெருமிதம்
வெகுளி உவகைஎன்
றப்பால் எட்டே மெய்ப்பா
டென்ப”
என்னும் தொல்காப்பிய
நூற்பாவால் தெளிக,
பெருமிதம் கல்வியாலும்
அஞ்சாமையாலும், புகழாலும் கொடையாலும் தோன்றும் என்பது தொல்காப்பியர் கருத்து. இதனையும்
அவர்,
கல்வி தறுகண்
புகழ்மை கொடைஎனச்
சொல்லப் பட்ட
பெருமிதம் நான்கே
என்று கூறியுள்ளனர்.
இதனால்தான் ஈண்டுப் பிள்ளை அவர்கள் செல்வச் செருக்கும் குன்றை என்றனர்.
இறைவன் திருவருளைப்
புராணமாகச் சேக்கிழார் பெற்றுள்ளமையின் அருட்செல்வர் எனப்பட்டனர்.
(72)
|