பக்கம் எண் :

2

610

             சிற்றில் பருவம்

2.     ஒழிக்கும் திறத்தில் அருகந்தன்
           உறையா நின்ற பாழிகொல்அவ்
       உறுவர் அமரும் பள்ளிகொல்மற்
           றுள்ளார் ஆய பரசமயர்
       பழிக்கும் படிவாழ் இருக்கைகொல்யாம்
           பாங்கில் புரிஇச் சிறுவீடு
       பதத்தில் சிதைத்தால் வருகின்ற
           பயன்புண் ணியமோ புகழ்கொல்லோ
       சுழிக்கம் செலவில் பாலிநதி
           சுரந்து பாய மாலியானைத்
       தொண்டை எடுப்பு மறையும்விதம்
           துவன்றி வளர்ந்து விளைசெந்நெல்
       செழிக்கம் வயல்தண் டகநாடா
           சிறியேம் சிற்றில் சிதையேலே
       செல்வம் செருக்கு குன்றைஅருள்
           செல்வா சிற்றில் சிதையேலே.

    (அ. சொ.) சுழிக்கும் செலல்-சுழித்துப் போகும் போக்கில், பாலிநதி-பாலாறு, மாலியானை-பெரிய யானை, தொண்டை-துதிக்கை, எடுப்பு-தூக்குதல், துவன்றி-நெருங்கி, அருகந்தர்-சமணர்கள், உறையாநின்ற-வாழ்கின்ற, பாழி கொல்-சமணப்பள்ளிகளா (இல்லையே) உறுவர் கோயில்- பௌத்த முனிவர் பள்ளிகளா (இல்லையே) பள்ளி முனிவர் வாழ் இடம், இருக்கை-இருப்பிடம், பாங்கு-அழகாக, பதத்தில்-திருவடிகளால், செலவு-செல்கை.

    விளக்கம் : சேக்கிழார் பெருமானார் திருஞானசம்பந்தர் திருமடத்திற்குத் தீவைத்ததாலும், திருநாவுக்கரசர்க்குப் பல தீங்குகளை இழைத்ததாலும், சமணர்களையும் அவர் வாழ் இடங்களையும் வெறுப்பவர்.  சமணப்பள்ளிகளை, பாழிகளை இடித்து மகேந்திரவர்ம பல்லவன் குணபர ஈக்சுரம் கட்டினான் என்பதைச் சேக்கிழார் கூறும்போது,