வ
வாள்” என்று அன்றோ திருவள்ளுவரும்
கூறியுள்ளனர்? கண்ணகியைக் காமக்கோட்டம் வணங்குமாறு, அவள் தோழி கூறியபோது, “பீடு அன்று”
என்று அன்றோ கூறினள்?
தோழி “பிறை தொழுக”
என்ற போது தலைவி தொழா திருந்த நிலையினைத் திருவாவடுதுறைக் கோவை,
தக்கோர் பணிகழல்
செம்பொன்
தியாகர் தடந்துறைசை
முக்கோ உடையர்
சடில
வட்டத்தின்
முளைமதிபோல்
சொக்கோடு
சொக்கரச் சுடர்வானில்
வெண்பிறைத்
தோற்றம்கண்டால்
கைக்கோ கனக
மலரே
குவியும்நம்
காரிகைக்கே
என்று கூறுகிறது.
இதில், “சந்திரனைக்
கண்டதும் கைகள் குவியுமே ஏன் குவியவில்லை” என்ற கருத்து இருத்தல்காண்க. திரு பிள்ளை அவர்களும்
இதனை விளக்கமுறத் தமது சீர்காழிக் கோவையில்,
ஆலங் குடிகொள்
மிடற்றார்
கழுமலத் தையர்செய்ய
சீலம் குடிகொள்
செழும்பொன்னி
நாட்டில் சிறுபிறைகண்
டேலம் குடிகொள்
குழலாய்
குவியும்எத் தாமரையும்
கோலம் குடிகொள்நின்
கைத்தா
மரைகுவி யாமைஎன்னே
என்று பாடியுள்ளனர்.
இவ்வாறெல்லாம்
அகப்பொருள் இலக்கணம் கூறுதலின், “அன்பின் ஐந்திணை என நவின்ற நூலில் செப்பிய விதிப்படி”
எனப்பட்டது.
|