பூந
பூந்தொத் தலர்போல்
கொடிதா
துகுமா றென்னப் புனைந்த
சாந்தம் கலவை யுகப்போய்
வனமங் கையர்போல் சார்ந்தார்
என்று பாடியுள்ளதைக் காண்க.
சோலைகளில் வண்டு
ஒலித்தல் இயல்பு. அவ்வொலி பண் பாடுதல் போன்றது என்பது கவிகள் கூறிவரும் மரபாகும். ‘வண்டு
பாட மயில் ஆல’ என்ற சம்பந்தர் வாக்கையும், ‘அரும்பருகே சுரும்பருவ அறுபதம் பண்பாட’ என்ற
சுந்தரர் மொழியையும் காண்க. இங்ஙனம் பாடுபவர்க்கும் (மயில்கள் தோகை விரித்து ஆடும்)
ஆடுபவர்க்கும் அங்குள்ள கொன்றை மலர்களும், செருந்தி மலர்களும் பரிசாகக் காசை அளிப்பதுபோல
மலர்களைச் சிந்தும். இவ்வாறும் புலவர் பெருமக்கள் பாடுவர்.
வரைசேரும்
முகில்முழவ மயில்கள்பல
நடமாட வண்டுபாட
விரைசேர் பொன்
இதழிதர மென்காந்தள்
கைஏற்கும் மிழலையாமே
என்று சம்பந்தர் பாடிய
பாடலால் தெளியவும்.
இங்குச் செருந்தி
மலர் பொன் காசுகளாக அமைந்து, பாட்டிற்குப் பரிசளித்ததாகப் புலவர் கூறுகிறார். ‘செருந்தி
மலர் பொன்னிறமுடையது. இதனை நமது காழிப்பிரானார், ‘செருந்தி செம்பொன் செயும் திருநெல்வேலி’
என்றும், திரு மங்கை ஆழ்வார், ‘பொன் அலர்ந்த நறும்செருந்திப் பொழில்” என்றும் சிறப்பித்த
ஆற்றாலும் அறியலாம்.
(75)
|