6
6. தாங்கும் வளவன்
அனபாயன்
தன்கண் மணியாய்
அவன்அமைச்சர்
தங்கள் சூளா மணியாய்உத்
தமச்சோ ழப்பல்
லவன்எனும்பேர்
ஓங்கும் படிகொள்
விண்மணியாய்
உவக்கும் அடியார்
சரித்திரமுற்
றுரைசெய் தருள்சிந்
தாமணியாய்
உயர்வு பூணின்
இளம்பருவ
வாங்கும் பிறைநல்
நுதலார்செய்
வண்டல் சிதைக்க
வேண்டுவதோ
வாழைக் குருத்து
மதிநடுப்போய்
மாரன் குடைக்கோர்
காம்பாகித்
தேங்கும் திருத்தண்
டகநாடா
சிறியேம்
சிற்றில் சிதையேலே
செல்வம் செருக்கு
குன்றைஅருள்
செல்வா
சிற்றில் சிதையேலே
[அ. சொ.] மதி-சந்திர
மண்டலத்தின், மாரன்-மன்மதன், வளவன்-சோழ மன்னன், அனபாயன்-அனபாய சோழன், அமைச்சர்-மந்திரிமார்,
சூளாமணி-முடிமணி, உத்தமச் சோழப் பல்லவன்-அனபாயன் சேக்கிழார் பெருமானார்க்கு இட்ட பட்டப்
பெயர், படி-பூமி, விண்மணி, விண்ணில் விளங்கும் மணியாகிய சூரியன், உவக்கும்-மகிழும், சிந்தாமணி-தேவலோகத்தில்
உள்ள மணி, பூணின்-ஆபரணங்களினால், நடு-வயிறு, தேங்கும்-அமையும், வாங்கும்-வளையும் பிறை-பிறைச்
சந்திரனைப் போன்ற, நுதலார்-நெற்றியுடைய மாதர், வண்டல்-மகளிர் விளையாடும் சிற்றில்.
விளக்கம் : தாங்கும்
வளவன் என்றது கருத்து உயிர்கள் துன்புறாது செங்கோல் நடாத்தி உலகைக் காத்து வருவதாகும்.
“நெல்லும் உயிர் அன்று நீரும் உயர் அன்று, மன்னன் உயர்த்தே மலர்தலை உலகம்” என்று புறம்
கூறுதலால்
|