| 
New Page 1
 
வென்ற நின்றசீர் நெடுமாறன்” 
என்று போற்றியுள்ளதையும் காண்க.  சேக்கிழார் பெருமானார் இந்நாயனார் புராணத்துள் நெல்வேலிப் 
போரைப் பற்றியும் படைகள் போர் புரிந்ததைப் பற்றியுமே பாடி இருப்பதன் கருத்து, நாயன்மார்கள் 
இறை அன்பு அடியார் அன்பு உடையராயினும், அதே சமயத்தில் வீரராகவும் இருந்தனர் என்பதையும் உணர்த்துவதற்காக 
என்பதையும் ஈண்டே உளம் கொள்ளுதல் வேண்டும்.  இது குறித்தே இவர், “வீரம் என்னால் 
விளம்பும் தகையதோ” என்றும் விளம்பியுள்ளனர். 
    இந்தச்  சாளுக்கியர்  
பாண்டியர்  போரைப்பற்றிச்  சாளுக்கியப்  பட்டயமே ஒப்புக்கொள்கிறது. 
    பூசலார் நாயனார் 
புராணத்துள், 
    காடவர் கோமான் 
கச்சிக் கற்றளி எடுத்து முற்ற 
    மாடெலாம் சிவனுக் 
காகப் பெருஞ்செல்வம்  
                                       
( வகுத்தல் செய்வான் 
என்ற பாடல் உளது. 
    அக்காடவர் 
கோமான் என்பவன் இராஜசிங்கன் என்னும் பல்லவன்.  கச்சிக் கற்றளி என்பது காஞ்சிபுரம் சர்வ 
தீர்த்தக் குளத்தருகேயுள்ள கயிலாசநாதர் கோயிலாகும்.  இக்கோயிலுக்கு இவ்வரசன் பெருஞ்செல்வம் 
அளித்தான் என்பது கயிலாயநாதர் கோவில் கன்னடக் கல் வெட்டாலும் கேர்ந்தூர்ப் பட்டயத்தாலும், 
வக்கலேரிப் பட்டயத்தாலும் உணரலாம். 
    இறைவர் அசரீரியாக 
இருந்து ராஜசிங்கனுக்கு உரைத்தார் என்பதைச் சேக்கிழார், 
நின்றஊர்ப் பூசல்அன்பன் 
நெடிதுநாள் நினைந்து 
நன்றுநீ டாலயத்து நாளைநாம் 
புகுவோம் நீஇங் 
கொன்றிய செயலை நாளைஒழிந்துபின் 
கொள்வாய் என்று 
கொன்றைவார் சடையார் 
தொண்டர் கோயில்கொண்  
                                         
( டருளப் போனார் 
என்று பாடிக் காட்டுகிறார். 
 |