| 
அவர
 
அவர்கள் அறிவித்திருப்பது 
அவர்க்குச் சேக்கிழார்மீது இருக்கும் பற்றையும், சிவ பரம்பொருளினிடத்துக்  கொண்டுள்ள  அன்பையும்,  அவரது சித்தாந்த புலமையும்  எடுத்துக் காட்டுவதாகும். 
    இவ்வுண்மைகளை எல்லாம் 
உணர்ந்த எங்களை விரும்பாது சிற்றிலைச் சிதைத்தல் ஒண்ணுமோ என்று சிறுமியர் கூறினர் என்க.  
சீதவளம் என்றது குன்றத்தூர் நீர்வளத்தை என்க.   
(78) 
8.      பொன்னம் சிலம்பு 
புலம்படிமண் 
            பொருந்தித் 
துளையும் விழைவடையில் 
        பொலியும் பற்பல் 
உபநிடதம் 
            புகறல் கேட்டு 
நீறொருவும் 
        முன்னம் 
கொள்சிற் சிலர்நுதலின் 
            முயங்கிப் 
படிந்த மண்தோய்ந்து 
        முருங்கத் துளைதல் 
கூடிடில்அம் 
            மோகம் அவர்நீத் 
துய்வாரே 
        கன்னம் கரிய கடாப்பாய்ந்து 
            காமர் 
பொய்கை நீர்கலக்கல் 
        கழிந்தோட் டெடுக்க 
வரால்எழுந்து 
            கடுக மோதப் 
பலவுதிரும் 
        தென்னம் பழத்தண் 
டகநாடா 
            சிறியேம் 
சிற்றில் சிதையேலே 
        செல்வம் செருக்கு 
குன்றைஅருள் 
            செல்வா 
சிற்றில் சிதையேலே 
    [அ. சொ.] கன்னம்கரிய-மிகக்கரிய, 
காமர்-அழகிய, ஓட்டெடுக்க-விரைந்து ஓட்டம் பிடிக்க, பல-பலாப்பழம், பொன்னம் சிலம்பு-பொற் 
சிலம்பு, புலம்பு-ஒலிக்கும்,  துளை-அழுந்திக் கிடக்கும், விழைவு-விருப்பம், 
பொலியும்-விளங்கும், புகறல்-கூறுதல், நீறு-திருநீற்றை, ஒருவும்- 
 |