New Page 1
பொருள் கூறினும்
பொருந்தும். காரணம் சிவனடியார்களில் பிராம்மணர்களும் இருத்தலின் என்க.
நம் என்று திரு.
பிள்ளை அவர்கள் கூறியது ‘உளப் பாட்டுத் தன்மைப் பன்மை பற்றியாகும். சிவ பெருமானுக்குமேல்
ஒரு பொருள் இன்மையின் “பரன்” என்றனர். இவன் பிறரால் (தேவர் மக்கள் முதலானவர்களால்) தொழப்
படுபவனே அன்றித் தான் ஒரு பொருளைத் தொழாதவன் என்று நாம் அறிதலின், முக்கண் மூர்த்தியே
பரமன் என்பதை நன்கு அறிதியிட்டு உறுதியாகக் கூறலாம். சிவபெருமான் எவரையும் தொழாதவன் என்பதை
நமது திரு வாசகம் “செய்யானை வெண்ணீறு அணிந்தானைச் சேர்ந்தறியாக் கையானை எங்கும் செறிந்தானை”
என்று அறிவித்திருப்பதை அறிக. பிறரைத் தொழும்போதுதான் கைகள் ஒன்றோடொன்று சேரும். அவ்வாறு
சேரும் வாய்ப்புச் சிவபெருமானுக்கு இன்மையின், சேர்ந்து அறியாக் கையானை என்றனர். ஆகவே,
அவன் பரமன்தானே. பரனாவான் மேலானாவன்.
சிவனடியார்கள்
மறையோரினும் சிறந்தவர் என்பதைப் பிராமணராம் சுந்தரர் திருத்தொண்டத்தொகைபாடி அவர்கட்குத்
தாம் அடிமை என்றது கொண்டும், திருநாளைப் போவாராம் அடியாரது அன்பைக்கண்டபோது “திருவுடைய தில்லை
வாழ் அந்தணர்கள் கை தொழுதார்” என்பதாலும் “அருமுனிவர் துதிசெய்தார்” என்பதாலும்,
“மறையோர் முன் கூறுபடும் பரன் அடியார்” என்பது உண்மை ஆதல் உணர்க.
சேக்கிழார்
பெருமானார் அடியார்களின் வீடுகளை மாட மாளிகைகளாக ஆக்கி அருங் கலி புனைந்து பாடி இருத்தலின்
“நெடுவானும் ** குடி அமைப்பாய்” என்றனர். அவை வளமுடையனவாக இருந்தன என்றும் அவர் படிக்காட்டியுள்ளனர்.
“கொம்பனார் இல்லம் எங்கும் குறைவிலா நிறைவில் காணும், அம்பொனின் குவையும் நெல்லும் அரிசியும்”
|