பக்கம் எண் :

வழங

 

       சிறுபறைப் பருவம்

665

வழங்கல் வேண்டும்” என்றும் எழுதியுள்ளனர். இதற்குப் பிரமாணமாக,

        முக்கணான் கணநா தர்க்கு
            முதன்மைத்துண் டிரன் ஆண்டு
        மிக்கதுண் டீரன் நாடாய்த்
            தண்டக வேந்தன் தாங்கித்
        தக்கதண் டகன நாடாய்த்
            தமனன்மாக் குலத்துச் சோழன்
        தொக்கதார்த் தொண்ட
            மான்காத் தாயது தொண்டனாடே

என்ற பாடலையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

    தொண்டை நாட்டின் தலைநகரம் காஞ்சி.  அதனையும் துண்டீர நாடு, துண்டீரபுரம் என வழங்கியதாகத் தெரிகிறது.  இதனைக் கந்த புராணத்தில் வரும்,

    அரியதோர் கயிலைக் கணங்களில் ஒருவன்
        ஆனதுண் டீரன்மா லதிபால்
    பெருமயல் கொள்ளச் சிவன்இவ ளொடுநீ
        பிறந்திருந் தின்பமுற் றென்பால்
    வருகென நிலைமேல் மனனர்பால் தோன்றி
        மற்றவ ளோடுசேர்ந் தரசு
    புரிதரு செயலால் காஞ்சிதுண் டீர
        புரமெனப் புகலநின் றதுவே

எனும் பாடலால் தெளியலாம்.

    தொண்டை நாடு பலரது ஆட்சியில் இருந்ததையும் கந்தபுராணம்,

    தண்ணளி புரிதுண் டீரனும் நள்ளார்
        சமர்த்தொழில் கடந்ததண் டகனும்
    அண்ணலம் கரிகால் வளவனும் பிறரும்
        அரசுசெய் தளித்ததந் நகரம்

என்றும் கூறுகிறது.

    தொண்டைநாடு தேயமுழுதும் பரவும் பெருமைக் குரியது என்பதற்குரிய காரணங்களைச் சேக்கிழார்.