3
3. புகழ்சரியை
கிரியையை அனுட்டித்து வருகின்ற
புண்ணியப் பேற்றினார்க்குப்
புலரியில் சிவபிரான்
தளிஎழும் சங்கமுன்
போதரு முழக்காகவும்
இகழ்வில்சிவ யோகசா
தனம்மரீஇ அம்முறை
இயங்குதிற
லாளருக்காங்
கெழுகின்ற சங்கபட கம்பேரி
ஆதியின்
இசைப்பெரு முழக்காகவும்
அகழ்கின்ற பாலியாற்
றலைஎழீஇக் கற்பகம்
அலைத்தோட அதன்அடிக்கண்
அவாய்நின்ற காமதே
னுவைநோக்கி நின்னால்
அமைந்ததிப் படர்எனநனி
திகழ்கின்ற செவ்வம்உயர்
துண்டீர வளநாட
சிறுபறை முழக்கியருளே
தென்றலங் கன்றுலவு மன்றஒண்
குன்றைமுனி
சிறுபறை முழக்கியருளே
(அ. சொ.)
மரீஇ-ஈடுபட்டு, புலரியில்-அதிகாலையில், தளி-கோவில் சங்கம், படகம், பேரி முதலியன வாத்திய
வகைகள், கற்பகம்-கற்பகநாடு, அவாய்-பொருந்தி, படர்-துன்பம், நனி-மிகவும்,
முன்போதரும்-முன்னால்போகும்.
விளக்கம் :
சரியை கிரியை இன்ன என்பது முன்பே செங்கீரைப் பருவத்தில் விளக்கப்பட்டுளது. விளக்கம் ஆண்டுக்
காணவும். சரியை கிரியை மார்க்கத்தை மேற்கொள்வது என்றால் அதற்கு முன் பிறப்பில் புண்ணியம்
செய்திருத்தல் வேண்டும். இதனைத் திருஞான சம்பந்தர் தம் நெஞ்சிற்கு அறிவுறுத்தும் முறையில்
உலகிற்கு உணர்த்தியுள்ளார்.
என்ன புண்ணியம்
செய்தனை
நெஞ்சமே
இருங்கடல் வையத்து
முன்னம் நீபுரி
நல்வினைப்
பயனிடை முழுபணித்தர
ளங்கள்
|