| 
அனுபவம
 
அனுபவம்.  ஏன்ற - 
பொருந்திய, மான்ற-மயங்குதற்கான, பொழில்தலை-சோலையில், கமுகம் - பாக்கு, தவிர் - தங்கும், 
மதுரம் - தேன், தேத்தடை - தேன்கூடு, தேத்தடை+தேன் அடை, வான்பிறைக்கோடு-ஆகாயத்தில் உள்ள 
பிறைச் சந்திரனின் முனை, இனன்-சூரியன், கீள-உடைக்க, வாவி-கிணறு, அது-அத்தேன். 
     விளக்கம் :  அடியார்கள் 
பற்பலர் என்பது நமது சுந்தரரது திருத்தொண்டத் தொகையால் நன்கு விளக்கம் ஆகிறது.  தில்லை 
வாழ் அந்தணர்களும் அடியார்கள் ஆவார்.  அவர்கள் எண்ணிக்கையும் மூவாயிரம்.  பத்தராய்ப் பணிவார், 
பரமனையோ பாடுவார், சித்தத்தைச் சிவன்பாலே வைத்தவர், திருவாரூர் பிறந்தார்கள், 
முப்போதும் திருமேனி தீண்டுவோர், முழு நீறு பூசிய முனிவர்கள், அப்பாலும் அடிச் சார்ந்தார்கள் 
ஆகிய இவர்கட்கு ஓர் குறிப்பிட்ட எண் உண்டா? (பொய்யடிமை இல்லாதபுலவர் என்று சுந்தரரால் 
குறிப்பிடப்பட்டவர் தனி அடியாரே என்ற கொள்கையில் அத்தொடர் பற்றிய விளக்கமாகப் பொய்யடிமை 
இல்லாத புலவர் யார் என்பதை ஆராய்ந்து ஒரு நூலினை அடியேன் எழுதி இருத்தலின், மேலே குறிப்பிட்ட 
தொகையடியார் தொகுதியில் பொய்யடிமை இல்லாத புலவவரைச் சேர்த்திலன்.  அவர்களும் தொகையடியார்களே 
என்று கொள்கிறவர்கள் சேர்த்துக்கொள்ளவும்) எவ்வாறாயினும், அடியார்கள் பற்பலர் என்பது உண்மை.  
சேக்கிழார் பெருமானார், இறைவனது அடியவர்கள் தமிழ் நாட்டிலே அன்றி, வேறு எந்நாட்டில் பிறந்திருப்பினும் 
எம்மரபில் பிறந்திருப்பினும், எம்மதத்தில் பிறந்திருப்பினும், எம்மொழியினராகப் பிறந்திருப்பினும் 
அவர்களும் இறைவனது அடியவர்களே என்பதை நன்கு தெளிவுறத் தெரிவித்திருப்பதை, 
    மூவேந்தர் தமிழ்வழங்கும் 
நாட்டுக் கப்பால் 
        முதல்வனார் அடிச்சார்ந்த 
முறைமை யோரும் 
    நாவேய்ந்த திருத்தொண்டத் 
தொகையில் கூறும் 
        நற்றொண்டர் 
காலத்து முன்னும் பின்னும் 
 |