பக்கம் எண் :

மல பர

 

       சிறுபறைப் பருவம்

677

மல பரிவாகம் ஏற்பட, அதனால் சத்தினிபாதம் உண்டாக, அதனால் தீவிரதர நிலையினை அடைந்தவர்க்கு இறைவன் குருவாக வந்து ஞான உபதேசம் செய்ய, அதனைக் கேட்டவர் சிந்தித்து, தெளிந்து, நிட்டை கூடிப் பாசத்தை ஒழித்துச் சிவத்துடன் அத்துவிதமாகிச் சாயுச்சி நிலையை உற்றுச் சிவானுபோகத்தில் திளைப்பர் என்பதாம்.  ஆகவே, எய்துதற்கரிய “சிவானுபோகாம்” என்றனர்.

    இப்பாட்டின் ஈற்றுப்பகுதி நிலவள மாண்பைப் புகழுகிறது.  பாக்கு மரங்களில் தேன் கூடுகள் நிரம்பி இருந்தன.  அப்பாக்கு மரங்கள் நீர்வளத்தால் மிக உயர்ந்து ஆகாயம் அளாவி வளர்ந்தன.  அதனால் பிறைச் சந்திரனது கோடு பாக்கு மரத்தில் இருந்த தேன் கூடுகளில் பட்டு அவை உடைந்தன.  உடைந்ததனால் தேன் ஊற்றெடுத்தது.  ஊற்றெடுத்துக் குளம், ஓடை, கிணறு இவற்றை நிரப்பியது.

    சந்திரன் தேன் கூட்டைக் கீண்டதற்குக் காரணம், சந்திரன், தேன் கூட்டைச் (அது சிவந்து காணப்பட்டதால்) சூரியன் என்று மயங்கி அச்சூரியன் தன்னைக் கவர வருகிறான் என்று எண்ணிக் கீறியதாகம்.  ஆகவே, ஈண்டு மயக்க அணியும், ஏதுதற்குறிப்பு ஏற்ற அணியும் அமைந்திருத்தல் காண்க.                                

(85)