| 
5
 
5.     வில்லூரும் மணிமோலி 
வளவர்பெரு மான்பொன்அடி 
           வீழாத 
மருவலர்க்கும் 
       வெண்ணீறு கண்மணி 
புனைந்தைந் தெழுததெணா 
           வீணராம் 
சமயருக்கும் 
       எல்லூரும் ஒண்சிவ 
மணம்கமழ்தல் இல்லா 
           தியைந்தசிந் 
தாமணிமுதல் 
       எந்நூற்கும் நெய்தலம் 
பறைமுழக் கேயாக 
           எல்ஒளி மழுக்கும்மேனிச் 
       சொல்லூரும் எம்பிரான் 
பெருமதம் பொழிமண் 
           துழாம்கைமா 
லியானைதந்த 
       தோல்போர்வை 
போர்த்ததெனத் தென்றல்வந் துலவஅழல் 
           தோற்றுதே 
மாஞ்சோலைமேல் 
       செல்லூரும் மேன்மையமை 
துண்டீர வளநாட 
           சிறுபறை முழக்கியருளே 
       தென்றலங் கன்றுலவு 
மன்றஒண் குன்றைமுனி 
           சிறுபறை முழக்கியருளே. 
    
(அ. சொ.)
வில்-ஒளி, 
ஊர்தல்-பரவுதல் மோலி-முடியினையுடைய, வளவர் பெருமான்-அநபாய  சோழமன்னன்,  பொன்-அழகிய,  மருவார்க்கும்  பகைவர்க்கும்,   கண்மணி-உருத்திராக்க மாலை, புனைந்து-தரித்து, ஐந்தெழுத்து-பஞ்சாட்சரமாகிய 
மகாமந்திரத்தை, எணா-எண்ணாத, எல்-ஒளி, இயைந்த-அமைந்த, சிந்தாமணி-சீவகசிந்தாமணி என்னும் 
நூல், நெய்தல் அம்பறை-சாப்பறை, எல்-சூரியன், மழுக்கும்-குறையச் செய்யும், மழங்கச் செய்யும், 
எம்பிரான்-சிவபெருமான், துழாம்-துழாவுகின்ற, சொல்-புகழ், மாலியானை-பெரியயானை, அழல்-நெருப்பு 
ஒளிபோலக் கொழுந்துகளைப் பெற்று விளங்கும், தே-இனிய, செல்-மேகம். 
     விளக்கம் : அநபாயன் 
முடி பொன்னாலும் மணியாலும் ஆனமையின் ஒளி பொருந்தியதாயிற்று.  ஆதலின், ஊரும் 
 |