பக்கம் எண் :

இன

 

       சிறுபறைப் பருவம்

681

        இன்பம்மற் றென்னும் பேரான்
            எழுந்த புற்கற்றை தீற்றித்
        துன்பத்தைச் சுரக்கும் நான்கு
            கதியெனும் தொழுவில் தோன்றி
        நின்றபற் றார்வம் நீக்கி       
            நிருமலன் பாதம் சேரில்
        அன்பு விற்றுண்டு போகிச்
            சிவகதி அடைய லாமே

என்றும், (ஈண்டு இறுதியில் பெறும் முத்திப்பேறு சிவகதி என்றே உணர்த்தினமை காண்க.)

“கேவல மடத்தை என்னும் கேழ்கிளர் நெடிய வாட்கள்
பூவலர் முல்லைக் கண்ணிப் பொன்னொரு பாகமாகக்
காவலன் தான்ஒர் கூறாக் கண்ணிமை யாதுபுல்லி
மூவுலகுச்சி இன்பக் கடலினுள் மூழ்கி னானே” என்றும்

கூறியதைக் காண்கையில் சீவகசிந்தாமணியில் சிவமணம் இல்லை என்று கூறுதற்கு இல்லை என்பது புலப்படுகிறது.  மேலே காட்டிய செய்யுளில் மோட்ச நிலை அம்மை அப்பர் வடிவ நிலையே என்பதை எவ்வளவு தெளிவுறத் திருத்தக்க தேவர் உணர்த்தினர் என்பதைக் காணவும்.

    நெய்தல் பறை ஒன்பது சாப்பறை ஆகும.் இஃது ஓர் அரிய தமிழ்ச் சொல்.  இதனைத் திரு. பிள்ளை அவர்கள் புறநானூற்றில்,

    ஓரில் நெய்தல் கறங்க ஓர்இல்
    ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்
    புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
    பைதல் உண்கண் பனிவார் புறைப்பப்
    படைத்தோன் மன்றப் பண்பி லாளன்
    இன்னா தம்மஇவ் வுலகம்.

என்று பக்குடுக்கையார் பாட்டின் வாயிலாக அறிந்தனர் என்க.

    சேக்கிழார் கொட்டும்பறை சோழனது பகைவர்கள் அழிந்தமையினால் கொட்டும் சாப்பறையாகவும், திருநீறு