கண
கண்டிகை ஐந்தெழுத்தைப் பயன்படுத்தாத வீணர்க்குச் சாப்பறையாகவும், சிந்தாமணி போன்ற நூற்குச் சாப்பறையாகவும்
இருக்கும்படி சிறு பறை முழக்கம் செய்ய ஆசிரியர் வேண்டுகின்றார்.
இறைவன் ஒளி சூரியன்
ஒளியினும் ஒளியுடையது. “ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதி” என்று ஆளுடைய அடிகளும்”
“கார்ஒளிய திருமேனிச் செங்கண் மாலும் கடிக்கமலத் திருந்தயனும் காணா வண்ணம் சீர் ஒளிய தழற்பிழபாய்
நின்ற தில்லைத் திகழ்ஒளியை” என்று ஆளுடைய அரசரும் இறைவனது ஒளியை வியந்திருப்பதைக் காண்க.
ஒரு புலவர், “உலையில் இருப்பு வண்ணத்து மேனியன்” என்றனர். இதனால்தான் “எல்ஒளி மழுக்கும் மேனி”
என்றனர்.
மாஞ்சோலையின்மீது
மேகம் தவழ்ந்திருக்கும் காட்சி, இறைவன் தன்மீது யானைத் தோலைப் போர்த்திருக்கும் காட்சி
போன்றது என்கிறார் திரு பிள்ளை அவர்கள். மாமரம் அழல்கொழுந்து போன்ற இலைகளைப் பெற்றிருப்பதால்
செந்நிறத்துடன் விளங்கற்கும், மேகம் கரு நிறத்துடன் அம் மரங்கள்மீது படிந்திருத்தற்கும் இவர்,
சிவனார்மேனியில் யானைத் தோல் போர்த்திருப்பது போன்றது என்று கூறும் உவமை கழிபேர் உவகை
தருகிறது.
யானை கொழுத்தால்
தானே மண்ணைத் தலையில் கொட்டிக்கொள்ளும் இயல்பினது. இவ்வியல்பை எண்ணியே ஈண்டுத் திரு
பிள்ளை அவர்களால் “பெருமதம் மொழிமண் துழாம் கைமாலி யானை” எனப்பட்டது. “யானை தந்த தோல்”
என்றதன் கருத்து, இறைவன் தானாக யானை மீது போர்க்குப் போகாமல் அதுவாக வந்து பொருது தோற்றதனால்,
அதன் தோலைப் போர்த்திக் கொண்டனர் என்பதாம். அதனால்தான் “யானை தந்த தோல்” என்றனர்.
இறைவன் யானைத் தோலைப் போர்த்துக் கொண்ட வரலாறு: தருகா வனத்து இருடிகள் இறைவன் மீது சினம்
கொண்டனர்.
|