New Page 1
“செல்லென்றுன் நாமத்தைச்
செப்பினதே அல்லாது
செல்லென் றுனைநரங்கள்
செப்பினமா-அல்லென்று
மெய்யா உவமிக்க விண்மீது
தோன்றியநீ
பெய்யாமல் போனதென்னோ
பேசும்”
என்று பாடிய பாட்டையும்
படித்து இன்புறுவோமாக.
மாமரங்கள்
நெருப்புக் கொழுந்துகளைப் போன்ற துளிர்களைக் காட்டும் என்பதைச் சுந்தரர்,
ஓதக் கடல்நஞ் சினைஉண்
டிட்ட
பேதைப் பெருமான் பேணும்
பதியாம்
சீதப் புனல்உண்டு
தீயைக் காலும்
சூதப் பொழில்சூழ்
சோற்றுத் துறையே
என்று பாடுதல் காண்க.
(86)
6. பிதிரும் தரம்அற
இன்பால் அளவிப்
பிழிசுவை
மதுவிரவிப்
பிறங்கிய புல்ல
கண்ட நிறீஇச்சுவை
பெறுகண் டுங்கூட்டி
எதிரும்
பொருளில் பலாக்கனி மாங்கனி
இவைவா ழைக்கனிமுன்
இயையும் முழுக்கனி
முந்திரி கைக்கனி
இவ்இர தமும்நாட்டி
அதிரும் கடல்அமிர்
தமும்உள் உறுத்தி
அவாங்குழல்
வீணைஇசை
அத்தனை யும்புக வைத்துச்
சிவமணம்
அகலா தேகமழ
முதிரும் அருட்கவி
பாடிய புலவன்
முழக்குக சிறுபறையே
முழுமணி மாடக்
குன்றத்தூரன்
முழக்குக சிறுபறையே
(அ. சொ.)
பிதிரும்தரம் அற-திரியும் தன்மை இன்றி, மது-தேன், விரவி-கலந்து, பிறங்கிய-விளங்கிய,
புல்ல
|