பக்கம் எண் :

கண

 

       சிறுபறைப் பருவம்

685

கண்டம் - சர்க்கரை, கண்டு - கற்கண்டு, நிறீஇ-நிறுத்தி, சேர்த்து, இயையும்-பொருந்தும், எதிரும்-ஒப்பாகும், இரதம்-ரசம், அவாம்-எவரும் விரும்பும், முந்திரிகைக் கனி-திராட்சைக் கனி, நாட்டி-சேர்த்து, நிறீஇ-நிறுத்தி, உறித்தி-பதித்து.

    விளக்கம் :  இப் பாடல் பெரிய புராணச் செய்யுட்களின் சுவையைக் குறிப்பதாகும்.  மது பிழிந்து எடுக்கப்படுதலின் பிழி சுவை மது என்றனர்.  கற்கண்டு,   சர்க்கரையினும் இனிப்பு மிகுதியுடைமையின் “சுவைபெருங் கற்கண்டு” என்றனர்.  பழங்கள் பல இருப்பினும் முக்கனி என்ற தொகைக் குறிப்பால் தொன்றுதொட்டுக் குறிப்பிடப்பட்டு வருவன வாழை, மா, பலா ஆகிய இம் மூன்று பழங்களே ஆகும்.  “முப்பழமொடுபால் அன்னம்”என்று வரும் தொடரைக் காணவும்.  இவை இனிமையிலும் சுவையிலும் ஒன்றை ஒன்று மிஞ்சாமல், என்றும் பெற்றுத் திகழ்வன.  இப்பழங்களைப் போன்ற சிறப்பும், இனிமையும், சுவையும் உடையவர்கள் மாதர்கள் என்ற குறிப்பினைச் சிவப்பிரகாச சுவாமிகள்,

    இக்குழு மகளிருள் யார்வ னப்பினால்
    மிக்கவள் எனத்தமை வினவி னார்எதிர்
    முக்கனி களுள்சுவை முதிர்ச்சி பெற்றது
    எக்கனி அதனைநீர் இயம்புவீர் என்றார்

என்று அறிவித்துள்ளனர்.  திருத்தக்க தேவரும் இம் முக்கனிகளையே “சினைத்துளிர் முழவன பலவின் தீங்கனி, கனைத்துவண்டுழல்வன வாழை மாங்கனி” என்று விதந்து கூறியுள்ளனர்.  இதனால்தான் எதிரும் பொருளில் பலா, மா, வாழை என்றனர்.  கடல் அல்லும் பகலும் சிறிதும் ஒழிவின்றி ஒலித்துக் கொண்டிருத்தலின், அதிரும் கடல் என்றனர்.  இதனைக் குறுந்தொகை அழகுற,

    யார்அணங் குற்றனை கடலே பூழியர்
    சிறுதலை வெள்ளத் தோடு பரந்தன்ன
    மீனார் குருகின் கானலம் பெருந்துறை