| 
ஓ
 
ஓகையுடன் சிறகுவிரித் 
துற்று நோக்கி 
    உருகிஇரு கண்இமையா 
திருந்து தூய 
நாகமிசை நடித்தருள்வோன் 
வேயின் ஊது 
    நாகஇசை இருசெவிஓர்ப் 
புற்று நைந்த 
கருமுகில் அஞ்சன நீலம் 
காயாம் பூவின் 
    கவின்நிகராம் 
உருஉடைய கண்ணன் வாயில் 
மருவுகுழல் ஊதஎழு நாத 
கீதம் 
    மகோததியின் அமிர்தெனவே 
செவியின் வாய்ப்ப 
அரியநறு மலரினுறு வேரி 
தன்னை 
    அருந்துதல்விட் டெய்தி 
அளி பாடா தாடா 
திருசிறகு விரித்துயர்வான் 
நசையா தேகா 
    தெழுதியசித் திரம்போல 
இருந்த தன்றே 
நாகரிக னானவள்ளல் ஊது 
கின்ற 
    நற்குழலில் எழுநாத 
கீதம் கேட்டே 
சூகரம்பஞ் சானனம் 
சார்த்தூலாங் கைமாத் 
    துலங்கியவா விகம்மயிடம் 
எண்கு சீறி 
மோகரத்தின் நெய்தாளி 
குருளை யோடு 
    முடுகசின மொழிந்துகண்கள் 
இமையா தாகிச் 
சாகரமாயச் செவிநெறித்தே 
உருகி நிற்பச் 
    சற்பங்கள் படம்விரித் 
டாமல் நின்ற 
காதினில்குண் டலம்இலங்க 
நெற்றி மீதில் 
    கத்தூரித் திலகஒளி 
கவினைக் காட்டச் 
சீதரன்தன் வாயின்இசை 
ஏழும் நாணச் 
    சிறந்தகுழல் ஊதஎழும் 
நாதம் தன்னால் 
பாதவங்கள் 
மதுச்சொரிய மலர்கள் வீழப் 
    பரந்துகனி உதிர்ந்திடவே 
பணிவார் போலப் 
பூதலத்தில் பரமன்நின்ற 
திரையை நோக்கிப் 
    பொலிந்த தாமரைக்கை 
வளைந்த மாதோ 
கானில்எழு நிலவெறிப்பத் 
தண்கால் வீசக் 
    காவின்உற மலர்வாசம் 
கமழக் கேழின் 
நானவெறி உறுமேனி திகழ 
நின்ற 
    நாரணனன்ஊ தும்வேயின் 
நாதம் கேட்ட 
 |