பக்கம் எண் :

700

             சிறுபறைப் பருவம்

    காணப்பட்ட உலகிற்குக் காணப்படாத இறைவன் உண்டு என்பதைச் சேக்கிழார் அரிவாள்   தாய  நாயனார்  புராணத்தும்,    திருக்குறிப்புத்   தொண்டர்   புராணத்தும் குறிப்பிட்டுள்ளனர்.

    அரிவாள் தாய நாயனார் தமது ஊட்டியினை அரிந்து கொள்ள முயன்றபோது, பூமி வெடிப்பினின்று கை ஒன்று தோன்றி, அவரை அரியாதவாறு செய்தது.  இதனை,

    மாசறு சிந்தை அன்பர் கழுத்தரி அரிவாள் பற்றும்
    ஆசில்வண் கையை மாற்ற அம்பலத் தாடும் ஐயர்
    வீசிய செய்ய கையும் மாவடு விடேல்வி டேல்என்று
    ஓசையும் கமரில் நின்றும் ஒக்கவே எழுந்த தன்றே

என்று பாடிக் காட்டினர்.  ஈண்டு நிலப்பிளவாம் பொருள் காணப்பட்டது.  ஆனால், ஊனக் கண்ணால்காணப்படாத இறைவன் அங்குக் காணப்பட்டுக் கைகாட்டித் தடுத்ததை உணர்க.  இவ்வாறே திருக்குறிப்புத் தொண்டர் புராணத்துள்,

கந்தைபுடைத் திடஎன்றும் கல்பாறை மிசைத்தலையைச்
சிந்தஎடுத் தெற்றுவன்என் றணைந்துசெழும் பாறை
                                        மிசைத்

தந்தலையைப் புடைத்தெற்ற அப்பாறை தன்மருங்கு
வந்தெழுந்து பிடித்ததணி வளைத்தழும்பர் மலர்ச்செங்கை

என்று காணப்படாத இறை காணப்பட்ட நிலையும் உண்டு என்று சேக்கிழார் நிலை நிறுத்தியதைக் காண்க.

    இறைவனது அடிமைகளாக ஆன்மா உண்டு என்பதை அடியார்களின் தோற்றங்களே நமக்குப் புலப்படுத்துகின்றன.  அங்கம் பூம்பாவை வரலாற்றில் ஆவி போதலும் ஆவி வருதலும் ஆகிய செய்திகைளச் சேக்கிழார் குறிப்பிடுகையில்,

    ஆவி தங்குபல் குறிகளும் அடைவில தாக
    மேவு காருட விஞ்சைவித் தகர்இது விதிஎன்று