| 
ந
 
நிழல் கூறிய, 
பொருளின் ஆகும் எனப்புகல்வாம்” என்பது சேக்கிழார் வாக்கு. 
    இறைவன் சிலம்பொலி 
செய்து காட்டல் சிறப்புடைய  நிகழ்ச்சியின்போதே ஆகும்.   இந்த உண்மை கழறிற்றறிவார் நாயனார் 
புராணத்துள் நன்கு உணரலாம். 
    சேரமான் பெருமாள் நாயனார் 
தில்லைக் கூத்தப் பெருமானைப்பூசித்து நிற்கையில் பூசையினை இறைவன் ஏற்றதற்கு அறிகுறியாகச் 
சிலம்பொலியினை எழுப்பிக் காட்டுவர்.  ஒரு நாள் சேரர் பெருமானார் கூத்தப்பெருமானது சிலம்போசையினைக், 
கேளாத நிலையில் அவர் இறைவனிடம், “இன்று பூசை முடிவில் சிலம்போசையினை அடியேன் கேளாத நிலையில் 
யான் செய்த தவறு என்னையோ?” என்று வினவித் தம் பூசையில் பிழை இருத்தல் வேண்டும்.  ஆதலின் 
ஓசையினைக் காட்டிலர் என்று உடைவாள் கொண்டு உயிரினை மாய்த்துக்கொள்ள முயன்றபோது. இறைவர் 
உடனே சிலம்போசையினை எழுப்பினர்.  இதனைச் சேக்கிழார், 
    பூசை கடிதுமுடித்து 
அடியேன் என்னோ 
        பிழைத்தது எனப்பொருமி 
    ஆசை உடம்பால் மற்றினிவே 
றடையும் 
        இன்பம்யா தென்று 
    தேசின் விளங்கும் 
உடைவாளை உருவித் 
        திருமார் 
பினில்நாட்ட 
    ஈசர் விரைந்து திருச்சிலம்பின் 
ஒசை 
        மிகவும் இசைப்பித்தார் 
என்று சிலம்போசை எழுந்ததைக் 
குறிப்பிட்டதைக் காணவும். 
தொண்டர் நாதனைத் தூதிடை 
விடுத்ததும் முதலை 
உண்ட பாலனை அழைத்ததும் 
எலும்புபெண் உருவாக் 
கண்ட தும்மறைக் கதவினைத் 
திறந்ததும் கன்னித் 
தண்ட மிழ்ச்சொலோ 
மறுபுலச் சொற்களோ சாற்றீர் 
 |