பக்கம் எண் :

இப

 

       சிறுதேர்ப் பருவம்

723

    இப்படி இப்படி தன்னில் விதிப்படி இம்பரும் உம்பரும் ஏனோரும், அப்படிச் சூழ்தரத் திருவீதிவலம் செய்து, கற்பகம் பூமாரி மொழிந்தனர் என்ற குறிப்பினால், தேவலோகத்து ஐந்து தருக்களின் மலர்களாகிய அரிச்சந்தனம், கற்பகம், சந்தானம், பாரிசாதம், மந்தாரம் என்ற ஐந்து மலர்களும் “ஒருமொழி ஒழிதன் இனங்கொளற் குரி்த்தே” என்பதற்கு இணங்க மாரிபோலச் சிந்தப் பெற்றன என்க.  சேக்கிழார் எவரும் செய்தற்கு அருமையான செயலாகிய பெரிய புராணத்தைப் பாடினமையால், வானாடர் மகிழ்ந்து கற்பக பூமாரி மொழிந்தனர்.  மூவாயிரவர் சேக்கிழார் காலத்தில் இருந்தனர்.  அவர்கள் அங்ஙனம் அத்தொகையில் குறையாது விளங்கி இருந்தனர் என்பதைச் சுட்டவே, பிறங்கு மூவாயிரவர் என்றனர். அம்மூவாயிரம் என்னும் தொகை இதுபோது குறைந்திருப்பது வருந்தத்தக்கது.  வேதியர்கள் வேதபாராயணம் செய்து கொண்டு பின் போதரல் இறைவன் உலாப் போகுங்கால் மட்டும் இன்றி, இறைவன் அருள்பெற்றவர்கள் உலாப் போம்போதும் போதல் வேண்டும் என்பதும், அப்படி வேத கோஷம் செய்து கொண்டு வேதியர் சென்றனர் என்பதும், “மூவாயிரவர் தொடர்ந்து போத” என்னும் அடி உணர்த்தி நிற்கிறது.  இறைவன் அருள்பெற்றோர்களும் இறைவனோடு ஒப்ப வைத்து எண்ணப்படுவர் என்பது,

    “வினையின் நீங்கி விளங்கிய அறிவின்
     முனைவன் கண்டது முதல்நூல் ஆகும்”

    “முன்னோர் நூலின் முடிபுஒருங்க ஒத்துப்
     பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி
 அழியா மரபினது வழிநூல் ஆகும்”

என்று மேலேகாட்டிய நூற்பாக்களுக்கு உரை கண்ட சங்கர நமச்சிவாயர் கூறும் கூற்றுக்களைக்கொண்டு உணர்ந்து கொள்ளலாம். அவர் கூறிய உரை “முனைவன் கண்டது முதல் நூலாகும்” என ஒருமையால் கூறினார்.  ஈண்டு முன்னோர் நூலெனப் பன்மையால் கூறியது, இறைவன் நூலையும்