| 
என
 
என்றனர்.  “குவித்த 
கரம் விரித்தறியார்” என்பது தியாகராசர் லீலை. 
    தில்லையின் சிறப்பு, 
கூற ஒண்ணா அத்துணைச் சிறப்புடையது. அஃது எத்திசையினரும் வணங்கும் இயல்பினது.  அதனாலே அது தில்லை
பொது என்றும் கூறப்பட்டு வருகிறது.  இதனை உட்கொண்டே தாயுமானவர்,  
    சன்மார்க்க ஞானமதில் 
பொருளும் வீறு  
        சமயசங்கே தப்பொருளும் 
தானொன் றாகப் 
    பன்மார்க்க நெறியினிலும் 
கண்ட தில்லை 
        பகர்வரிய தில்லைமன்றுள் 
பார்த்த போதங் 
    கென்மார்க்கம் 
இருக்குதெல்லாம் வெளியே என்ன 
        எச்சமயத் தவர்களும்வந் 
திறைஞ்சா நிற்பர் 
    கன்மார்க்க நெஞ்சமுள 
எனக்குந் தானே 
        கண்டவுடன் ஆனந்தம் 
காண்டல் ஆகும் 
என்று பாடியருளினர். இக்காரணத்தால்தான் 
ஈண்டு ஓங்கு தில்லை எனப்பட்டது.   “அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம் அன்றோ!” 
    சிறுகோல் என்பது 
ஏர் அடிக்குங்கால் எருதுகளை விரட்டுவதற்கு உழவர்கள் கையில் கொண்டுள்ள தாற்றுக் கோலாகும். 
இக்கோல் சிறு கோலே ஆயினும், இக்கோல்தான் அரசர் செங்கோல் நிறுத்தற்குக் காரணமாவது.  
உழவர்கள் இச்சிறுகோல் கொண்டு எருதுகளை அதட்டி நிலத்தை உழுதலைச் செய்யார் எனில், விதைகளை 
விதைக்க இயலாது.  விதைகளை விதைக்கவில்லையாயின், உணவுப் பொருள்களைப் பெறமுடியாது.  
உணவுப்பொருள்கள் நாட்டில் விளையாவிடின் அரசர் தம் செங்கோலைச் செம்மையாக நடத்த முடியாது.  
இந்த உண்மையினை, 
    காராளர் அணிவயலில் 
உழுது தங்கள் 
        கையார் நட்டமுடி 
திருந்தில் இந்தப் 
    பாராளும் திறல்அரசர் 
கலித்த வெற்றிப் 
        பசும்பொன்மணி 
முடிதிருந்தும் கலப்பை பூண்ட 
 |