| 
இ
 
இருபாலினும் மணிதங்கிய 
இருகோடு படைத்து 
வெருவார்களும் வெருவித்துயர் 
கோவத்தவ உரறி 
மருவார்குழல் உமைஅஞ்சுற 
வரலான் உயர்கம்பை 
பெருமான்எதிர் பண்டெய்திய 
பெருவேழமும் நிகரும் 
என்று கூறப்பட்டதற்கு 
இணங்க “மூரிப்புனல்கம்பை” என்றனர். 
    இவ்வாறு பெருகிய கம்பா 
நதியினைக் கண்ணுற்ற அம்மையார், இது தாம் வழிபடும் இலங்கத்தையும் அணுகி அடித்துக்கொண்டு 
போகும் என்று அஞ்சி உடனே இலங்கத்தைத் தழுவி வெள்ளத்தால் அடித்துக்கெண்டு போகாதவாறு செய்தனர்.  
இதனைக் காஞ்சிப் புராணம், 
    “ஒருகொடி எழுந்து செம்பொன் 
     உயர்வரைக் குவடு 
தன்னை 
     இருகொழுந் திருபால் 
போக்கித் 
     தழீஇஎன எழுந்து 
வல்லே 
     முருகலர் வேதி உம்பர்த் 
     தன்வலம் முழந்தாள் 
ஊன்றிக் 
     கருமணிப் பாவை அன்னாள் 
     கணவரைத் தழுவிக் 
கொண்டாள்” என்கிறது. 
இக் காட்சியை இன்றும் 
ஒவ்வொரு திங்கட்கிழமை தோறும் ஏகாம்பரநாதர் கோவில் மூலட்டான இவிங்க தரிசனத்தின்போது 
காணலாம். இங்ஙனம் தழுவிய போதுதான் இறைவர், தாம் கல்லாக இருப்பதால் அவளது முலை உறுத்தப்படுமே 
என்று அருள் நினைவு கூர்ந்து, தம் திரு மேனியினைக் குழைந்து கொடுத்தனர். இதனையும் அப்புராணம், 
மணிமுலைக் குவட்டி னோடு 
வளைக்கையால் நெருக்கித் 
துணிவரும் காதல் விம்ம 
காதலி தழுவ லோடும் 
திணிஇருள் இறுக்கும் 
சோதித் திருவுருக் குழைந்து  
                                         காட்டி 
அணிவளைத் தழும்பி 
னோடு முலைச்சுவ டணிந்தார் ஐயர் 
என்று போற்றுகிறது.  திருமேனி 
முற்றும் குழைந்தது என்பது மேலே காட்டிய பாடலில்வரும் இக்கருத்துக்களே 
 |