பக்கம் எண் :

இவ

 

       காப்புப் பருவம்

73

    இவ்வா றருளிச் செய்தருளி இவர்கள்
        புதல்வன் தனைக்கொடிய
    வெவ்வாய் முதலை விழுங்குமடு எங்கே
        என்று வினவிக்கேட்
    டவ்வாழ் பொய்கைக் கரையில்எழுந் தருளி
        அவனை அன்றுகவர்
    வைவாள் எயிற்று முதலைகொடு வருதற்
        கெடுத்தார் திருப்பதிகம் ; 

என்று எடுத்து மொழிந்தனர். 

    இதனால்தான் அருள்மூவர் எனப்பட்டது.  மூவர் பாடிய பாடல்கள் மறையே.  நிறைமொழி மாந்தர் உள்ளத்தெழுந்த உரைகள் அத்தனையும் மறைகளே, மந்திரங்களே.  இதனை ஆசிரியார் தொல்காப்பியர்,

    “ நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த
    மறைமொழி தானே மந்திரம் என்ப “

என்றும், ஆசிரியர் திருவள்ளுவர்,

    “ நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
    மறைமொழி காட்டி விடும் “

என்றும்,

அறிவுறுத்திச் சென்றுள்ளனர்.  இம்மூவர் மொழிந்த மொழிகள் மறைகளாக மந்திரங்களாகத் திகழ்ந்தமையினை அவர்கள் செய்து காட்டிய அற்புத நிகழ்ச்சிகளைக் கொண்டு நாம் அறிகிறோம்.  இறைவர் வேதங்களை அருளிச் செய்தார்.  அவ்வாறே மூவர் முதலிகளும் வேதங்களை அருளிச் செய்தார்.  இதனை சேக்கிழார் நன்கு தெரிவிப்பான் வேண்டி,

    திருமறை நம்பர்தாம்முன் பருள்செய்த
        அதனைச் செப்பும்
    ஒருமையில் நின்ற தொண்டர்
        தம்பிரா னார்பால் ஒக்க