பக்கம் எண் :

New Page 1

730

             சிறுதேர்ப் பருவம்

“முறியும் மலரும் குழைத்த ஞான்றிலும்” என்னும் வரியில் பொதிந்துளது.

    சிவஞான முனிவர் தாம் பாடிய அமுதாம்பிகைப் பிள்ளைத் தமிழில், இறைவி திருஞானசம்பந்தருக்குத் தனது திருமுலைப் பாலைப் பொன் வள்ளத்தில் கறந்து கொடுத்தமை இன்னின்ன காரணங்களாக இருக்கலாமோ என்று தோழிமார் வினவுவதுபோலப் பாடிய பாடலில் தழுவக் குழைந்த செய்தியையும் இயைத்துப் பாடியுள்ளனர். அது சுவையுடைய பாடலாக இருத்தலின், அதனையும் ஈண்டுப் பாடிப் பரவசமுறுதம் நன்றன்றோ?

    தெய்வச் சுருதி தமிழ்க்கன்றித்
        தீட்டா நிலைமைத் தெனஉலகில்
    தெறிக்கும் காழிச் சிவஞானச்
        செம்மல் குழவிக் கருள்ஞானம்
    பெய்து கொடுக்க வோமுலையாம்
        பெரிய மலைவாய் உறுத்தும் என்றோ
    பெருமான் தனையும் குழைத்தவலிப்
        பெற்றி அறிந்து தடுத்தோபூங்
    கையி னிலகு நகக்குறிப்பல்
        கதுவ நோம்என் றோதீம்பால்
    கறந்து கொடுத்தாய் எனச்சகிமார்
        கனிந்து பாட நகைமுகிழ்க்கும்
    வைவைத் தமைத்த மதர்வேல்கண்
        வாழ்வே வருக வருகவே
    வளங்கூர் குளந்தைப் பதிஅமுத
        வல்லி வருக வருகவே

என்பது அப்பாடல்.

    அறமெலாம் என்பது ஈண்டு முப்பத்திரண்டு அறங்களாம். இவற்றைக் காஞ்சிபுராணம் பின்வருமாறு,

    தெய்வம்தென் புலத்தார் பூதம்
        மானிடம் பிரமம் என்றோர்
    ஐவகை எச்சம் பூர்த்தம் துறந்தவர்
        மடங்கள் அன்பு