| 
வ
 
வரும்அருள் செய்கைதாமே 
    வகுத்திட வல்லோர் 
என்றால் 
பெருமறை யுடன்மெய்த் 
தொண்டர்க் 
    கிடையீடு பெரிதாம் 
அன்றே. 
என்று அறிவித்திருப்பதைக் 
காண்க.  ஆகவே, மூவர் அருள் மறை என்றது முற்றிலும் உண்மை.  மேலும், சேக்கிழார் திருஞான சம்பந்தரைக் 
குறிக்கும்போது  “ தமிழ் வேதம் பாடினார் தாளம் பெற்றார் “  என்று கூறுதலையும் ஈண்டு நினைவு 
கொள்ளுதல் வேண்டும். 
    மூவர் முதலிகள் 
அருளிய தமிழ் வேதங்களின் உண்மைப் பொருள் இன்னது எனத் தெரிவிப்பதில் சேக்கிழார்க்கு இணை 
எவரும் இலர். 
    திருக்கொடி மாடச்செங்குன்றூரில் 
திருஞான சம்பந்தருடன் இருந்த சிவனடியார்கள் நளிர் சுரத்தால் வாடியபோது ஆளுடைய பி்ள்ளையார், 
அவ்வினைக் கிவ்வினை 
யாம்என்று சொல்லும் அஃதறிவீர்  
உய்வினை நாடா திருப்பதும் 
உந்தமக் கூனம்அன்றே 
கைவினை செய்தெம் 
பிரான்கழல் போற்றுதும்  
                                    நாம்அடியோம் 
செய்வினை வந்தெமைத் 
தீட்டப் பெறாதிரு நீலகண்டம் 
என்று பாடி அந்நளிரால் 
அடியார் வருந்தாவண்ணம் செய்தார்.  இப்பாடலில் திருநீலகண்டம் எனச் சிரபுரக்கோனார் ஏன் செப்பினார் 
என்பதற்கு விளக்கம் தரவந்த சேக்கிழார் பெருமானார், 
அவ்வினைக் கிவ்வினை 
என்றெடுத் தையர்அமுதுசெய்த 
வெவ்விடம் முன்தடுத் தெம்மிடர் 
நீக்கிய வெற்றியினால்,  
எவ்விடத் தும்அடி யார்இடர் 
காப்பது கண்டம் என்றே 
செவ்வினைதீண்டா திருநீல 
கண்டம்எனச் செப்பினார் 
 |