| 
ப
 
பதை காலாட் படையாகக் 
கருதவேண்டும் என்றற்காம். வீரர் ஏந்தும் ஆயுதங்கள் போரிடும்போது கெட்டொழிதல் இல்லாமல் 
இருக்கவேண்டும், ஆதலின் அசைவில் என்ற அடை கொடுத்துக் கூறினர்.  கொடு என்பது கொண்டு என்பதாகும். 
    தமிழ் இலக்கணத்தில் 
பொருள் இலக்கணம், இரு கூறு உடையது.  ஒன்று அகப்பொருள், மற்றொன்று   புறப்பொருள்.   
புறப்பொருளில்  போர் முறைகள்  கூறப்படுதல்   உண்டு.  அங்ஙனம் கூறுங்கால் குறிப்பிடப்படும் துறைகள் 
பல. அவற்றுள் ஒன்று, நூழில் ஆட்டு என்பது.  இந்நூழிலாட்டுத் தும்பைத் திணையின் ஒரு கூறு.  தும்பையாவது 
“அதிரப் பொருதல்” தொல்காப்பியர், 
    மைந்து பொருளாக வந்த 
வேந்தனைச் 
    சென்றுதலை அழிக்கும் 
சிறப்பிற் றென்ப 
என்பர். 
    இத் தும்பை பன்னிரு 
துறைகளை உடையது.  அவற்றுள் ஒன்று நூழில் ஆட்டு.  இதனைத் தொல்காப்பியர், “ஒள்வாள் வீசிய 
நூழிலும்” என்று குறித்துள்ளனர்.  இதற்கு உரை கண்டபோது “வாளால் தடிந்து கொன்று குவித்தல்” என்று 
உரை எழுதினர் நச்சினார்க்கினியர்.  நூழில் என்னும் சொல் கொன்று குவித்தல் என்ற 
பொருளில், 
    வள்ளை நீக்கி 
வயமீன் முகந்து 
    கொள்ளை சாற்றிய 
கொடு முடி வலைஞர் 
    வேழப் பழனத்து நூழில் 
ஆட்டு 
என்று மதுரைக் 
காஞ்சியில் வருதல் காண்க. 
    இங்ஙனம் பகைவரைக் 
கொன்று குவித்தபோது செந்நீர் பல ஆறாகச் செல்லும்.  இவ்வாறு கூறியது உயர்வு நவிற்சி அணி 
கருதி என்க. அச் செந்நீர் ஆற்றில் சேனையில் இறந்த பிணங்கள் அடித்துச் செல்லப்பட்டபோது 
சென்ற பிணங்கள் 
 |